சவால்களுடன் நடைபெறவிருக்கும் 3வது டெஸ்ட் ! இறுதி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறப் போவது யார் ? 1

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெற முடியும் என்று பேசப்படுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 

சவால்களுடன் நடைபெறவிருக்கும் 3வது டெஸ்ட் ! இறுதி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறப் போவது யார் ? 2

முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என சமநிலையில் இருக்கின்றனர்.

இதையடுத்து நடைபெற இருக்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி  அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா” மைதானத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இதில் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். 

சவால்களுடன் நடைபெறவிருக்கும் 3வது டெஸ்ட் ! இறுதி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறப் போவது யார் ? 3

இந்த 3ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரில் முன்னிலை வகிப்பதற்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  அதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் போட்டி தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி தகுதி பெறுவதற்கான போட்டியாக இருக்கிறது. எனவே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாக இருக்கிறது.

இதற்காக இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறிய உமேஷ் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்து விளையாட போவதாக கூறப்படுகிறது. ரசிகர்களிடம் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. இந்த 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் நிற பந்தில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சவால்களுடன் நடைபெறவிருக்கும் 3வது டெஸ்ட் ! இறுதி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெறப் போவது யார் ? 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *