ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்டிற்கு பதிலாக இந்த இருவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.. இந்திய அணிக்கு ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இரு வீரர்களுக்கு பதில் இந்த வீரர்களை தேர்வு செய்யலாம் என்று பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்டிற்கு பதிலாக இந்த இருவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.. இந்திய அணிக்கு ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. அதற்கு முன் அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 

சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்திற்கு செல்வதால் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற பல இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் திரிபாட்டிக்கும் முதன்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்டிற்கு பதிலாக இந்த இருவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.. இந்திய அணிக்கு ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

இந்தநிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் எந்த வீரர்களை வைத்து விளையாடினால் அணிக்கு நலமாக அமையும் என்று முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு அறிவுரை வழங்குகின்றனர்.

குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரு வீரர்களும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளதால் அவர்களுக்கு பதில் எந்த வீரரை தேர்ந்தெடுத்தால் இந்திய அணிக்கு பலமாக அமையும் என்று பெரும்பாலான முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்டிற்கு பதிலாக இந்த இருவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.. இந்திய அணிக்கு ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர் !! 4

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் படேல் செய்தியாளர்கள் சந்திப்பில் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இரு வீரர்கள் பதில் கீழ் கூறப்பட்ட வீரர்களை தேர்வு செய்யலாம் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் பேசுகையில், “நாம் சஞ்சு சாம்சன் குறித்து அதிகமாகவே பேசி விட்டோம்,பலரும் அவருடைய வருகையை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள், அவர் எப்படி விளையாடுவார் என்பதை பார்ப்பதற்கு அனைவரும் ஆவலாக உள்ளனர். இதன் காரணமாக இவரை ஆடும் லெவனில் இணைத்துக் கொள்ளலாம், இவரை அடுத்து பலர் தீபக் கூடாவிர்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தெரிவிக்கின்றனர், அதுவும் ஒரு நல்ல தேர்வு தான்.மேலும் துவக்க வீரராக செயல்பட வேண்டும் என்றால் வெங்கடேஷ் ஐயரை ருத்ராஜுடன் விளையாட வைக்கலாம், மேலும் எந்த இடத்தில் களமிறங்கினாலும் சிறப்பாக செயல்படும் ராகுல் திரிபாட்டியும் உள்ளார், ஆனால் முதலில் வெங்கடேஷ் ஐயரை தான் விளையாட வைக்க வேண்டும் அப்பொழுதுதான் போட்டி சூடு பிடிக்கும்” என்று பார்திவ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.