அந்த பையனுக்கு நிச்சயம் இடம் உள்ளது; இளம் வீரருக்கான இடத்தை உறுதி செய்த புஜாரா !! 1

இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில்லுக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் இடம் கிடைக்கும் என சீனியர் வீரரான புஜாரா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்க உள்ளது.

அந்த பையனுக்கு நிச்சயம் இடம் உள்ளது; இளம் வீரருக்கான இடத்தை உறுதி செய்த புஜாரா !! 2

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இரு அணிகள் இடையேயான முதல் போட்டி துவங்க இன்னும் இரு தினங்களே உள்ளதால், இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதே போல் சவால் நிறைந்த இந்த தொடருக்கான தங்களது எதிர்பார்ப்புகளையும் இரு அணியின் சீனியர் வீரர்களும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த பையனுக்கு நிச்சயம் இடம் உள்ளது; இளம் வீரருக்கான இடத்தை உறுதி செய்த புஜாரா !! 3

அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் சீனியர் வீரரான புஜாரா, சுப்மன் கில்லிற்கு ஆடும் லெவனில் நிச்சயம் இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

அந்த பையனுக்கு நிச்சயம் இடம் உள்ளது; இளம் வீரருக்கான இடத்தை உறுதி செய்த புஜாரா !! 4

இது குறித்து புஜாரா பேசுகையில், “சுப்மன் கில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற தகவலை என்னால் தற்போது வெளியிட முடியாது. ஆனால் ஆடும் லெவனில் நிச்சயம் சுப்மன் கில்லிற்கு இடம் கிடைக்கும். சுப்மன் கில் திறமையான வீரர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சுப்மன் கில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட முடியாமல் போனது துரதிஷ்டவசமானது, ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), புஜாரா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *