ரொம்ப தப்பான முடிவு... இந்த இரண்டு பேர் இல்லாம எப்படி ஜெயிக்குறீங்கனு பாப்போம்; முன்னாள் வீரர் காட்டம் !! 1

நியூசிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இயான் ஸ்மித் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்க உள்ளது.


டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இரு அணிகள் இடையேயான முதல் போட்டி நாளை துவங்க உள்ளதால், இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ரொம்ப தப்பான முடிவு... இந்த இரண்டு பேர் இல்லாம எப்படி ஜெயிக்குறீங்கனு பாப்போம்; முன்னாள் வீரர் காட்டம் !! 2

குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறாததால் இந்த போட்டி நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமையும் என்றும் சிலர் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்னிலையில் பலம்வாய்ந்த நியூசிலாந்து அணியை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர் இல்லாத நிலையில் இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்பது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரொம்ப தப்பான முடிவு... இந்த இரண்டு பேர் இல்லாம எப்படி ஜெயிக்குறீங்கனு பாப்போம்; முன்னாள் வீரர் காட்டம் !! 3

அந்தவகையில் நியூஸிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இயான் ஸ்மித் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறாதது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெறாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது, இது ஏதேனும் சூழ்ச்சி ஆக இருக்குமோ என்று தனிப்பட்ட முறையில் எனக்கு தோன்றுகிறது என்று இயான் ஸ்மித் தெரிவித்திருந்தார்.

மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *