ரிஷப் பண்ட் தனது பொறுப்பை மறந்து விளையாடுகிறார்; முன்னாள் நியூசிலாந்து வீரர் ஓபன் டாக் !! 1

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டரி பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் தனது பொறுப்பை மறந்து விளையாடுவதாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 56 ரன்களும், இஷான் கிஷன் 29 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தீபக் சாஹர் 8 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.

ரிஷப் பண்ட் தனது பொறுப்பை மறந்து விளையாடுகிறார்; முன்னாள் நியூசிலாந்து வீரர் ஓபன் டாக் !! 2

இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான மார்டின் கப்தில் சிறப்பாக செயல்பட்டு 51 ரன்கள் எடுத்தார், ஆனால் அடுத்து வந்த வீரர்கள் சொல்லிக்கொள்ள மதவெறிக்கு விளையாட அதன் காரணமாக நியூசிலாந்து அணி 17.2 ஓவரில் 111 ரன்கள் மட்டுமே எடுத்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதே போல் மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு கிரிக்கெட் வட்டாரங்கள் மத்தியில் வெகுவாக பாராட்டு கிடைத்து வருகிறது, இருந்தபோதும் இந்திய அணியின் சில வீரர்கள் தனது பொறுப்பை மறந்து சொதப்பி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ரிஷப் பண்ட் தனது பொறுப்பை மறந்து விளையாடுகிறார்; முன்னாள் நியூசிலாந்து வீரர் ஓபன் டாக் !! 3

அந்த வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ரிஷப் பண்ட் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் முன்பு போல சிறப்பாக செயல்படவில்லை அவர் தனது ரோல் என்னவென்று உணர்ந்து செயல்படுகிறார் என்பது தெரியவில்லை, ரிஷப் பண்ட் ஒரு அதிரடி வீரர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படவில்லை, மேலும் இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்டிடம் அவரது பங்களிப்பு (ரோல்) குறித்து பேசியதா என்பது தெரியவில்லை, டி20 தொடரில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு இந்திய அணியில் இஷன் கிஷன் மற்றும் கேஎல் ராகுல் உள்ளனர் இருந்தபோதும் இந்திய அணி அடுத்தடுத்து வாய்ப்புகளை ரிஷப் பண்டிர்க்கு கொடுத்து வருகிறது என்றும் டேனியல் வெட்டோரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *