இந்திய வீரர்கள் யாரும் செய்யாத சாதனை; வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 1

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா டி.20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்திய வீரர்கள் யாரும் செய்யாத சாதனை; வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 2

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 56 ரன்களும், இஷான் கிஷன் 29 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தீபக் சாஹர் 8 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.

இந்திய வீரர்கள் யாரும் செய்யாத சாதனை; வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 3

இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான மார்டின் கப்தில் 51 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் டிம் செய்பர்ட் (17) மற்றும் லோகி பெர்குசன் (14) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 17.2 ஓவரில் 111 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதே போல் மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுவதுமாக கைப்பற்றியது.

இந்தநிலையில், இந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா, இந்த போட்டியின் மூலம் சில சாதனைகளுக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.

இந்திய வீரர்கள் யாரும் செய்யாத சாதனை; வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா !! 4

இந்த போட்டியில் மூன்று சிக்ஸர்கள் விளாசிய போது டி.20 கிரிக்கெட்டில் தனது 150வது சிக்ஸரை பதிவு செய்த ரோஹித் சர்மா, இதன் மூலம் சர்வதேச டி.20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள் விளாசிய இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 169 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். கிரிஸ் கெய்ல் 124 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *