டி20 தொடரில் இந்த வீரரின் ஆட்டத்தை பார்ப்பது வருத்தமளிக்கிறது; ஆகாஷ் சோப்ரா பேட்டி !! 1

அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 தொடர்களிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

குறிப்பாக நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரை 3-0 என கைப்பற்றி சாதனை படைத்தது.

டி20 தொடரில் இந்த வீரரின் ஆட்டத்தை பார்ப்பது வருத்தமளிக்கிறது; ஆகாஷ் சோப்ரா பேட்டி !! 2

என்னதான் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து விட்டனர் இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எந்த ஒரு வேலையும் இல்லாமல் எளிதாக அமைந்தது.

குறிப்பாக இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு போட்டியில் 12 பந்துகளில் 17 ரன்கள் அடித்து அசத்தினார் ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் இவர் வெறும் 4 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக ரிஷப் பண்ட் டி20 தொடரில் தடுமாறி வருவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார்

டி20 தொடரில் இந்த வீரரின் ஆட்டத்தை பார்ப்பது வருத்தமளிக்கிறது; ஆகாஷ் சோப்ரா பேட்டி !! 3

அதில் பேசிய அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய விஷயமாக உள்ளது, குறிப்பாக இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் முன்பு பேட்டிங் செய்தது போல் தற்போது அதிரடியாக பேட்டிங் செய்யவில்லை என்னதான் சிக்ஸர்கள் அடித்தாலும் அவர் டி20 தொடரில் அவர் விளையாடுவது கொஞ்சம் வருத்தமளிக்கிறது, டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படும் இவர் டி20 தொடரில் அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்று ஆகாஷ் சோப்ரா ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *