கோலியும் இல்ல... குட்டி கோலியும் இல்ல... நியூசிலாந்து அணியை எப்படி சமாளிக்க போறோம்னு தெரியல; ரஹானே ஓபன் டாக் !! 1

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல் ராகுல் விலகியுள்ளது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவை கொடுக்கும் என ரஹானே தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்க உள்ளது.

கோலியும் இல்ல... குட்டி கோலியும் இல்ல... நியூசிலாந்து அணியை எப்படி சமாளிக்க போறோம்னு தெரியல; ரஹானே ஓபன் டாக் !! 2

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இரு அணிகள் இடையேயான முதல் போட்டி நாளை துவங்க உள்ளதால், இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதே போல் சவால் நிறைந்த இந்த தொடருக்கான தங்களது எதிர்பார்ப்புகளையும் இரு அணியின் சீனியர் வீரர்களும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோலியும் இல்ல... குட்டி கோலியும் இல்ல... நியூசிலாந்து அணியை எப்படி சமாளிக்க போறோம்னு தெரியல; ரஹானே ஓபன் டாக் !! 3

அந்தவகையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனான ரஹானே, காயம் காரணமாக கே.எல் ராகுல் விலகியுள்ளது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

கோலியும் இல்ல... குட்டி கோலியும் இல்ல... நியூசிலாந்து அணியை எப்படி சமாளிக்க போறோம்னு தெரியல; ரஹானே ஓபன் டாக் !! 4

இது குறித்து ரஹானே பேசுகையில், “கே.எல் ராகுல் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு தான். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல் ராகுல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் கே.எல் ராகுலை மிஸ் செய்வோம், ஆனால் அவரது இடத்தை நிரப்ப தகுதியான வீரர்கள் இந்திய அணியில் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. திறமையான வீரர்கள் பலர் உள்ளதால் துவக்க வீரராக யாரை களமிறக்குவது என்பது குறித்தான கவலை எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), புஜாரா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *