சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா..? மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1
சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா..? மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி இது தான்

நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

யூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா..? மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பந்துவீச்சில் மிக மோசமாக சொதப்பிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 30ம் தேதி நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தாலும், கடைசி போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை முழுமையாக இழக்க நேரிடும் என்பதாலும், இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் ஆகியோரே துவக்க வீரர்களாக களமிறங்குவர்.

சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா..? மூன்றாவது போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

மிடில் ஆர்டரில் வழக்கம் போல் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவிற்கே இடம் கிடைக்கும். விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டிற்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதனால் கடந்த போட்டியை போல் மூன்றாவது போட்டியிலும் சஞ்சு சாம்சனிற்கு இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் தீபக் ஹூடா மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறுவார்கள். பந்துவீச்சாளர்கள் வரிசையில் தீபக் சாஹர், உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது.

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

சுப்மன் கில், ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *