புஜாரா இல்லை,இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்; கவுதம் கம்பீர் பேட்டி !! 1

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது அஜிங்கியா ரஹானே குறித்து பேசியுள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்க உள்ளது.

புஜாரா இல்லை,இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்; கவுதம் கம்பீர் பேட்டி !! 2

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இரு அணிகள் இடையேயான முதல் போட்டி துவங்க இன்னும் இரு தினங்களே உள்ளதால், இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதே போல் சவால் நிறைந்த இந்த தொடருக்கான தங்களது எதிர்பார்ப்புகளையும் இரு அணியின் சீனியர் வீரர்களும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் அஜிங்கியா ரஹானே குறித்தும் இந்திய அணி குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்.

புஜாரா இல்லை,இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்; கவுதம் கம்பீர் பேட்டி !! 3

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக அகர்வால் மற்றும் கேந்திராவின் களமிறங்க வேண்டும் அவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் புஜாரவும், 4வது இடத்தில் சுப்மன் கில்லும் விளையாட வேண்டும் மேலும் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் அஜிங்கியா ரஹானேவிற்கு இந்திய அணியில் விளையாடுவதற்கும் இந்திய அணியை வழி நடத்துவதற்கும் வாய்ப்பு கிடைத்தது அவருடைய அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும் கௌதம் காம்பீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *