இந்திய அணியின் இந்த முடிவு முட்டாள்தனமானது; கடும் விமர்ச்சனத்தை சந்திக்கும் இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணி குறித்த எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்திருந்தது.

பேட்டிங் ஆர்டர், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் ஆகிய இரண்டும் உறுதியாகியிருந்த நிலையில் ஸ்பின்னர் மற்றும் விக்கெட் கீப்பராக யார் இறங்குவார்கள் என்ற கேள்வி மட்டும் இருந்தது. அஷ்வின் – ஜடேஜா ஆகிய இருவரில் யார் ஸ்பின் பவுலராக இறங்குவார் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஸ்பின் பவுலிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து அஷ்வின் அணியில் எடுக்கப்பட்டார்.

இந்திய அணியின் இந்த முடிவு முட்டாள்தனமானது; கடும் விமர்ச்சனத்தை சந்திக்கும் இந்திய அணி !! 1

அதேபோல விக்கெட் கீப்பராக ரிதிமான் சஹா இறங்குவாரா அல்லது ரிஷப் பண்ட் இறங்குவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சஹா சேர்க்கப்பட்டார். இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக சுழன்று திரும்பும் என்பதால், ஸ்பின் பவுலிங்கை விக்கெட் கீப்பிங் செய்ய அனுபவமான விக்கெட் கீப்பர் தேவையென்ற வகையில் சஹா எடுக்கப்பட்டதாக அப்போதே விளக்கமளிக்கப்பட்டது.

இந்திய அணியின் இந்த முடிவு முட்டாள்தனமானது; கடும் விமர்ச்சனத்தை சந்திக்கும் இந்திய அணி !! 2

அதேபோல விக்கெட் கீப்பராக ரிதிமான் சஹா இறங்குவாரா அல்லது ரிஷப் பண்ட் இறங்குவாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சஹா சேர்க்கப்பட்டார். இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக சுழன்று திரும்பும் என்பதால், ஸ்பின் பவுலிங்கை விக்கெட் கீப்பிங் செய்ய அனுபவமான விக்கெட் கீப்பர் தேவையென்ற வகையில் சஹா எடுக்கப்பட்டதாக அப்போதே விளக்கமளிக்கப்பட்டது.

ஆனால் சஹாவை உட்காரவைத்துவிட்டு ரிஷப் பண்ட்டை எடுத்ததற்கான காரணத்தை கேப்டன் கோலி சொல்லவில்லை. இந்நிலையில், சஹாவை எடுக்காமல் ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்ததை ரசிக்காத ஹர்ஷா போக்ளே, தனது அதிருப்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள பதிவிட்டுள்ள டுவீட்டில், தூங்கி எழுந்ததும் சஹா எடுக்கப்படவில்லை என்பதை பார்த்தேன். இந்திய அணியில் இப்போது இருக்கும் இளம் விக்கெட் கீப்பர்களிடம், விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்குங்கள் என்று சொல்லாமல், பேட்டிங்கில் கூடுதலாக ரன்களை சேர்க்க வேண்டும் என்று சொல்வது அதிருப்தியளிக்கிறது.

நான் சொல்வதை தவறான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளாதீர்கள். இது ரிஷப் பண்ட்டை பற்றிய விஷயம் அல்ல. டெஸ்ட் போட்டிகளில் ஆடும்போது, மிகச்சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் சிறந்த 4 பவுலர்கள் ஆகியோருடன் விக்கெட் கீப்பிங்கில் மிகவும் திறமை வாய்ந்தவரைத்தான் எடுக்க வேண்டும். ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான். ஆனால் சஹாவிற்காக நான் வருந்துகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

ரிஷப் பண்ட் அணியில் இருப்பாரேயானால், அவரை கண்டிப்பாக ஆடும் லெவனில் எடுக்கலாம். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்டும் வைத்திருக்கிறார் என்று ஒருவர், ஹர்ஷாவிற்கு பதிலளித்திருந்தார்.

இந்திய அணியின் இந்த முடிவு முட்டாள்தனமானது; கடும் விமர்ச்சனத்தை சந்திக்கும் இந்திய அணி !! 3

அவரது கருத்துக்கு பதிலளித்த ஹர்ஷா, ரிஷப் பண்ட் மோசமான வீரர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில், அந்தந்த விஷயங்களில் கைதேர்ந்த திறமையான வீரர்களைத்தான் அணியில் எடுக்க வேண்டும். ரிஷப் பண்ட் வல்லமை பெற்று சிறந்து விளங்க இன்னும் டைம் இருக்கிறது. அவர் நிறைய ரன்களை அடிக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும்போது, பேட்டிங், பவுலிங், விக்கெட் கீப்பிங் என அனைத்திலுமே சிறந்தவர்களைத்தான் அணியில் எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை தேர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....