முன்ன மாதிரி இல்ல... இப்ப இந்த பையன் வேற லெவல்; இளம் பந்துவீச்சாளரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 1
முன்ன மாதிரி இல்ல… இப்ப இந்த பையன் வேற லெவல்; இளம் பந்துவீச்சாளரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர்

நீங்க நினைக்கிற மாதிரி முகமது சிராஜ் கிடையாது அவருடைய திறமையே வேறு என முகமது சிராஜின் திறமையை ஆகாஷ் சோப்ரா பாராட்டி பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில் மோசமான பந்து வீச்சால் ரசிகர்கள் உட்பட அனைவரது விமர்சனத்தையும் பெற்ற முகமது சிராஜ், இனிமேலும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டார்.

முன்ன மாதிரி இல்ல... இப்ப இந்த பையன் வேற லெவல்; இளம் பந்துவீச்சாளரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 2

ஆனால் தன்னுடைய கடினமான முயற்சி மற்றும் பயிற்சியினால் மோசமான பார்மிலிருந்து மீண்டு வந்த முகமது சிராஜ், 2020-21 நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ரெகுலர் பந்துவீச்சாளராக அறியப்பட்டார்.

அதற்குப் பின் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தனக்கு கொடுத்த வாய்ப்பை எல்லாம் மிகக் கச்சிதமாக பயன்படுத்திய சிராஜ், தற்பொழுது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடினார்.

முன்ன மாதிரி இல்ல... இப்ப இந்த பையன் வேற லெவல்; இளம் பந்துவீச்சாளரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 3

டெஸ்ட் தொடரில் தன்னால் எப்படி சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை முகமது சிராஜ் நிருபித்தாரோ.. அதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ரெகுலர் டி20 பந்துவீச்சாளர்களை விட மிக சிறந்த முறையில் பந்து வீசி நியூசிலாந்து அணி வீரர்களின் விக்கெட்டை சீட்டுக்கட்டு சரிப்பது போல் சரித்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில்,முகமது சிராஜ் ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய திறமையை அதிகரித்து வருவதை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

முன்ன மாதிரி இல்ல... இப்ப இந்த பையன் வேற லெவல்; இளம் பந்துவீச்சாளரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 4

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிரபல கிரிக்கெட் விமர்சனம் ஆகாஷ் சோப்ரா, இளம் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜின் பந்துவீச்சை வெகுவாக பாராட்டியுள்ளார்.

முகமது சிராஜ் குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “முகமத் சிராஜ் மிகச்சிறந்த முறையில் பந்துவீசியுள்ளார். நீங்கள் நினைப்பது போன்ற t20 பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கிடையாது, ஏனென்றால் அவர் மற்ற பந்து வீச்சாளர்களை விட அடித்து ஆடும் திறமை படைத்தவர்., அவருடைய அபரிவிதமான வளர்ச்சியை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற அணியிலிருந்து வந்த ஒரு வீரர் தற்போது மிக சிறந்த முறையில் பந்து வீசுகிறார். ஆரம்ப கட்டத்தில் அதிக ரன்கள் இவர் விட்டுக் கொடுத்திருந்தாலும், தற்பொழுது பந்துவீச்சில் முன்னேற்றம் அடைந்துள்ளார். மேலும் பக்குவமாகவும் பந்து வீசுகிறார். முகமது சிராஜ் இதுபோன்று திறமையாக பந்து வீசுவதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது” என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.