சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளுக்கு செட் ஆக மாட்டார்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1
சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளுக்கு செட் ஆக மாட்டார்; முன்னாள் வீரர் சொல்கிறார் !!

சூரியகுமார் யாதவிர்க்கு டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என மும்பை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விநாயக் மேன் தெரிவித்துள்ளார்.

பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது மிரட்டல் பேட்டிங்கின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ஒரு வருடத்திற்குள் டி.20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளுக்கு செட் ஆக மாட்டார்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரான சூர்யகுமார் யாதவ், தற்போது நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

டி.20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், சூரியகுமார் யாதவிர்க்கு டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்திய கிரிக்கெட் வட்டத்தில் வலுத்து வருகிறது.சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளுக்கு செட் ஆக மாட்டார்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

அந்த வகையில் மும்பை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் ஜிம்கான பார்சி அணியின் பயிற்சியாளருமான விநாயக் மேன்., சூரியகுமார் யாதவிர்க்கு டெஸ்ட் தொடரில் வாய்பளிக்க வேண்டும் என இந்திய அணிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து விநாயக் மேன் பேசுகையில், “சூரியகுமார் யாதவால் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியுமா என்பதை கணிக்க முடியாது.,ஆனால் அவருக்கு வாய்பளித்தால் அதற்காக கடினமாக முயற்சிப்பார் என்பதில் யாருக்கும் மாற்றுகருத்து இருக்க முடியாது என விநாயக் மேன் பேசியிருந்தார்.

சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டிகளுக்கு செட் ஆக மாட்டார்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 4

2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை விளையாட துவங்கிய சூரியகுமார் யாதவ் இதுவரை 41 டி20 போட்டிகளில் பங்கேற்று 1395 ரன்கள் அடித்துள்ளார். மேலும் டி20 தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன் என்ற ஐசிசி வரிசையில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். இவருக்கு டெஸ்ட் தொடரில் இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தபோதும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *