இந்த இரண்டு விசயத்த சரியா செஞ்சிட்டா போதும்... உன்ன அடிச்சிக்க ஆளே கிடையாது; உம்ரன் மாலிக்கிற்கு அட்வைஸ் கொடுக்கும் ஷமி !! 1
இந்த இரண்டு விசயத்த சரியா செஞ்சிட்டா போதும்… உன்ன அடிச்சிக்க ஆளே கிடையாது; உம்ரன் மாலிக்கிற்கு அட்வைஸ் கொடுக்கும் ஷமி

இந்த இரண்டு விஷயத்தை மட்டும் சரி செய்துவிட்டால் உன்னை அடிச்சுக்க இந்த உலகத்தில் ஆளே கிடையாது என்று உம்ரான் மலிக்கை முகமது சமி பாராட்டியுள்ளார்.

2022 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி தன்னுடைய அபாரமான வேகத்தால் இந்திய அணி கால் பதித்த இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், அடுத்தடுத்த போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிக சரியாக பயன்படுத்தி தற்போது லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணி ரெகுலர் வீரராக திகழ்கிறார்.

இந்த இரண்டு விசயத்த சரியா செஞ்சிட்டா போதும்... உன்ன அடிச்சிக்க ஆளே கிடையாது; உம்ரன் மாலிக்கிற்கு அட்வைஸ் கொடுக்கும் ஷமி !! 2

சர்வ சாதாரணமாக 150+ வேகத்தில் பந்து வீசக்கூடிய திறமை படைத்த உம்ரான் மாலிக் தான் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் இந்திய அணிக்கு தேவைப்படும் நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவாகி வருகிறார்.

இப்படி அபாரமான வேகப்பந்து வீச்சால் உலக கிரிக்கெட்டின் உச்சம் பெற்று வரும் உம்ரன் மாலிக்கை முன்னாள்,இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த இரண்டு விசயத்த சரியா செஞ்சிட்டா போதும்... உன்ன அடிச்சிக்க ஆளே கிடையாது; உம்ரன் மாலிக்கிற்கு அட்வைஸ் கொடுக்கும் ஷமி !! 3

அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி வளர்ந்து வரும் இளம் வேகப் பந்துவீச்சாளரான உம்ரான் மாலிக்கிற்கு பாராட்டுடன் கூடிய அறிவுரையை வழங்கியுள்ளார்.

இந்த இரண்டு விசயத்த சரியா செஞ்சிட்டா போதும்... உன்ன அடிச்சிக்க ஆளே கிடையாது; உம்ரன் மாலிக்கிற்கு அட்வைஸ் கொடுக்கும் ஷமி !! 4

அதில், “சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் நீ சிறப்பாக செயல்படுவாய் எனவும் நம்புகிறேன், என்னிடமிருந்து ஒரே ஒரு அறிவுரையை மட்டும் உனக்கு கொடுக்க விரும்புகிறேன், நீ வீசும் வேகத்தை எந்த ஒரு பேட்ஸ்மேனும் எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது என தெரியும். ஆனால் நீ லைன் மற்றும் லெடன்தில் மட்டும் கொஞ்சம் முயற்சி செய்து சரி செய்து விட்டால், இந்த உலகத்தில் உன்னை அடித்துக் கொள்வதற்கு ஆளே கிடையாது இந்த கிரிக்கெட் உலகையே நீ ஆளலாம்” என்று உம்ரான் மாலிக்கிற்கு முகமது சமி அறிவுரை கொடுத்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *