சஞ்சு சாம்சன்
பெரிய திறமைசாலி… ஆனால் இந்திய அணி சஞ்சு சாம்சனின் திறமையை வீணடிக்கிறது; முன்னாள் வீரர் காட்டம்

சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களின் திறமையை இந்திய அணி வீணாக்குகிறது என்று டேனிஷ் கனரியா குற்றம் சாட்டியுள்ளார்.

நியூசிலாந்து பயணம் மேற்கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது முதல் டி20 போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது t20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்திய அணி

இதில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி சூரிய குமாரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 65 ரன்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

என்னதான் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் புறக்கணிக்கப்பட்டது இந்திய ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய திறமைசாலி... ஆனால் இந்திய அணி சஞ்சு சாம்சனின் திறமையை வீணடிக்கிறது; முன்னாள் வீரர் காட்டம் !! 1

சம்பந்தமே இல்லாத பல வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட போது, ஏன் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் எழுந்து வருகிறது. இதனால் இந்திய அணியின் தேர்வை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து அதிகப்படியான கருத்துக்களை தன்னுடைய யூடியூப் சேனலின் வாயிலாக தெரிவித்து வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா, சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பளிக்காமல் அவருடைய திறமையை இந்திய அணி வீணடித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

பெரிய திறமைசாலி... ஆனால் இந்திய அணி சஞ்சு சாம்சனின் திறமையை வீணடிக்கிறது; முன்னாள் வீரர் காட்டம் !! 2துகுறித்து டேனிஷ் கனரியா தெரிவித்ததாவது, “இந்திய அணி சஞ்சு சங்சன் போன்ற வீரர்களின் திறமையை வாய்ப்பு கொடுக்காமல் வீணடித்து வருகிறது, சஞ்சு சாம்சன் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன், அவருக்கு அணியை வழிநடத்தும் தகுதியும் உள்ளது. இந்திய அணி நிர்வாகம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் மீது ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும், ஒரு கட்டத்தில் இந்திய அணியை வழிநடத்தக்கூடிய திறமை சஞ்சு சாம்சனிடம் உள்ளது, இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு நிலையான வாய்ப்பை வழங்க வேண்டும் அதை உடனே செய்ய வேண்டும்” என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிர்ச்சியாளர் ரவி சாஸ்திரியும்,மற்ற வீரர்களை அணியிலிருந்து நீக்கியாவது சஞ்சு சம்சனை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.