இந்திய அணி
மீண்டும் புறக்கணிக்கப்படும் தரமான இளம் வீரர்; முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான்

நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

மீண்டும் புறக்கணிக்கப்படும் தரமான இளம் வீரர்; முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி நடைபெற உள்ளது. டி.20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தியதை போன்று, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் பலர் இல்லாத இந்திய அணி, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மீண்டும் புறக்கணிக்கப்படும் தரமான இளம் வீரர்; முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக ஷிகர் தவானுடன், சுப்மன் கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. டி.20 தொடருக்கான ஆடும் லெவனில் இடம்பெறாத சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டே செயல்படுவார்.

மீண்டும் புறக்கணிக்கப்படும் தரமான இளம் வீரர்; முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வாசிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், வாசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாகூர், அர்ஸ்தீப் சிங், தீபக் சாஹர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *