சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் மட்டும் பெஸ்ட் கிடையாது… இன்னும் நிறைய பேர் இருக்காங்க; ஓபனாக பேசிய நியூசிலாந்து வீரர்

பேட்டிங்கில் தொடர்ந்து மிரட்டி வரும் சூர்யகுமார் யாதவை நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான டிம் சவுத்தி வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது மிரட்டல் பேட்டிங்கின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.

சூர்யகுமார் யாதவ்

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ஒரு வருடத்திற்குள் டி.20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரான சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சூர்யகுமார் யாதவ் மட்டும் பெஸ்ட் கிடையாது... இன்னும் நிறைய பேர் இருக்காங்க; ஓபனாக பேசிய நியூசிலாந்து வீரர் !! 1

நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பாரபட்சமே பார்க்காமல் பந்தாடிய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் சில ஷாட்களை இதுவரை தான் பார்த்ததே இல்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் ஓபனாக பேசும் அளவிற்கு தரமான ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தினார்.

தொடர்ச்சியாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வரும் நிலையில், நியூசிலாந்து அணியின் நட்ச்சத்திர வீரரான டிம் சவுத்தியும் சூர்யகுமார் யாதவ் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் மட்டும் பெஸ்ட் கிடையாது... இன்னும் நிறைய பேர் இருக்காங்க; ஓபனாக பேசிய நியூசிலாந்து வீரர் !! 2

இது குறித்து டிம் சவுத்தி பேசுகையில், “சூர்யகுமார் யாதவ் மட்டும் இல்லை, இந்திய அணியில் இருந்து தலைசிறந்த டி.20 வீரர்கள் பலர் கிரிக்கெட்டிற்கு கிடைத்துள்ளனர். கடந்த 12 மாதங்களாக சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சூர்யகுமார் யாதவ் மிக மிக சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அவர் மட்டுமே இந்திய அணியின் சிறந்த டி.20 வீரர் கிடையாது. ஏனெனில் இந்திய அணி பல சிறந்த வீரர்களை உருவாக்கியுள்ளது. டி,20 போட்டிகளில் மட்டுமல்லாமல் மூன்று விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கில் ஒரு தனித்துவம் உள்ளது. கடந்த 12 மாதங்களாக சிறப்பான பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், இரண்டாவது டி.20 போட்டியிலும் பிரமிக்க வைக்கவும் வகையில் விளையாடினார். அவருக்கு பந்துவீசுவது சற்று கடினமானது தான்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.