தயவு செஞ்சு ரிஷப் பண்ட்ட டீம்ல இருந்து தூக்கிடாதீங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆதரவு !! 1
தயவு செஞ்சு ரிஷப் பண்ட்ட டீம்ல இருந்து தூக்கிடாதீங்க… முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆதரவு

நியூசிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட் இடம்பெற வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

தயவு செஞ்சு ரிஷப் பண்ட்ட டீம்ல இருந்து தூக்கிடாதீங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆதரவு !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பந்துவீச்சில் மிக மோசமாக சொதப்பிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 30ம் தேதி நடைபெற உள்ளது.

இந்திய அணி

முதல் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தாலும், கடைசி போட்டியில் தோல்வியடைந்தால் தொடரை முழுமையாக இழக்க நேரிடும் என்பதாலும், இந்திய அணிக்கு முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதே போல் மூன்றாவது போட்டிக்கான ஆடும் லெவனில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தான தங்களது கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலர் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்ட்டை ஆடும் லெவனில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் பேசி வரும் நிலையில், மூன்றாவது போட்டியிலும் ரிஷப் பண்ட்டிற்கே இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

தயவு செஞ்சு ரிஷப் பண்ட்ட டீம்ல இருந்து தூக்கிடாதீங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆதரவு !! 3

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “மூன்றாவது ஒருநாள் போடிக்கான இந்திய அணியிலும் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும், அதுவே சரியானதாக இருக்கும். அடுத்த போட்டியிலும் அவர் சொதப்பினால் அவரை அணியில் இருந்து நீக்குவது குறித்து இந்திய அணி யோசிக்கலாம். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் என பல விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருப்பதால், ரிஷப் பண்ட் இல்லை என்றாலும் இந்திய அணியால் சமாளித்து கொள்ள முடியும். டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் மிக சிறந்த பேட்ஸ்மேன், டெஸ்ட் போட்டிகளில் அவரை குறை சொல்லவே முடியாது. ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் தொடர்ந்து சொதப்பி வருவது வேதனையான விசயம். தற்போதய இந்திய அணியில் கடுமையான போட்டி நிலவுதால், ரிஷப் பண்ட் விரைவில் தனது தவறுகளை திருத்தி கொள்வது அவருக்கு நல்லது” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *