இப்ப இவரு தான் எங்களுக்கு ரொம்ப முக்கியமான ஆளு… உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தை வெளியிட்ட பயிற்சியாளர்
இந்திய அணியில் அதிக முக்கியத்துவம் உள்ள வீரராக முகமது சிராஜ் திகழ்கிறார் என இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்பிரே தெரிவித்துள்ளார்.
நான்காவது முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம், 50-ஓவர் உலகக் கோப்பையை நடத்துகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு எடுத்து நடத்தியது. அப்போதுதான் இந்திய அணியும் கடைசியாக உலககோப்பையை வென்றது.
அதற்கு அடுத்ததாக, 2015 மற்றும் 2019 உலககோப்பைகளில் இந்திய அணி வெற்றி பெறும் அணியாக கருதப்பட்டது. ஆனால் கடைசியில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இம்முறை கோப்பையை வென்று மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெருமிதம் சேர்க்க வேண்டும் என்று பல திட்டங்களை பிசிசிஐ செயல்படுத்தி வருகிறது.
அந்த திட்டத்தில் ஒன்றாக, ரோகித் சர்மா மற்றும் டிராவிட் உடன் பிசிசிஐ நடத்திய ஆலோசனையில் குறிப்பிட்ட 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒன்பது மாதத்திற்கு உலகக்கோப்பை வரை அவர்கள் மட்டுமே மாறி மாறி பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள் என திட்டமிடப்பட்டிருக்கிறது. இன்னும் இந்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிடவில்லை.
இதனால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அபாரமான பார்மை வெளிப்படுத்தி கடுமையாக போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். இதில் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ், தனக்கு கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் மிகச் சிறப்பாக பந்து வீசி இந்திய அணிக்கு பல வெற்றிகளை குவித்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் அசைக்க முடியாத திகழ்ந்து வருகிறார்.
இதன் காரணமாக, எதிர்வரும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலில் முகமது சிராஜின் பெயரை நீக்கவே முடியாது என்று பெரும்பாலான முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் தற்போதைய இந்திய அணியில் முகமது சிராஜிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்றும், எதிர்வரும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் முகமது சிராஜிற்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என்றும் இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரஸ் மாம்ப்ரே தெரிவித்ததாவது,“தற்போதைய இந்திய அணியின் மிக முக்கிய வீரராக முகமது சிராஜ் திகழ்கிறார் அவரிடமிருந்து நாங்கள் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம், எதிர்வரும் 2023 உலகக் கோப்பை தொடருக்காக மட்டுமில்லாமல் அதற்குப் பிறகும் இந்திய அணியின் முக்கிய வீரராகவும் முகமது சிராஜை எதிர்பார்க்கிறோம். அவர் தற்பொழுது இந்திய அணியில் விளையாடுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இந்திய ஏ அணியில் விளையாடும்போதிலிருந்தே எனக்கு தெரியும், அவர் டெஸ்ட் போட்டிகளில் மிக சிறந்த முறையில் விளையாடியுள்ளார். மேலும் அந்த ஃபார்மை லிமிடெட் அவர் போட்டிகளிலும் கொண்டு வந்தது மிகவும் அருமையாக உள்ளது” என்றும் முகமது சிராஜின் செயல்பாடு குறித்து பவுலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.