சூர்யகுமார் யாதவ்
டிவில்லியர்ஸ் மாதிரி தான் இவரும்… சமாளிக்கிறதே ரொம்ப ரொம்ப கஷ்டம்; சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய நியூசிலாந்து வீரர்

ஏபிடி வில்லியர்ஸ் போல் எல்லா திசைகளிலும் பேட்டிங் செய்யும் திறமை சூரியகுமார் யாதவிடம் உள்ளதால்,அவருடைய பேட்டிங்கை கணிக்க கஷ்டமாக உள்ளது, என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே தெரிவித்துள்ளார்.

பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது மிரட்டல் பேட்டிங்கின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.

சூர்யகுமார் யாதவ்

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ஒரு வருடத்திற்குள் டி.20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரான சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டி.20 தொடரின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பாரபட்சமே பார்க்காமல் பந்தாடிய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் சில ஷாட்களை இதுவரை தான் பார்த்ததே இல்லை என நியூசிலாந்து அணியின் கேப்டன் ஓபனாக பேசும் அளவிற்கு தரமான ஆட்டத்தை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தினார்.

சூர்யகுமார் யாதவ்

தொடர்ச்சியாக பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே, எல்லா திசைகளிலும் அடித்து ஆடும் திறமை சூரியகுமார் யாதவிடம் உள்ளதால்,அவருடைய பேட்டிங்கை கணிப்பதற்கே மிகவும் கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

டிவில்லியர்ஸ் மாதிரி தான் இவரும்... சமாளிக்கிறதே ரொம்ப ரொம்ப கஷ்டம்; சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய நியூசிலாந்து வீரர் !! 1

சூரியகுமார் யாதவ் குறித்து ஆடம் மில்னே தெரிவித்ததாவது,“சூர்யா குமார் யாதவ், பந்து வீசுவதற்கு மிகவும் கடினமான ஒரு பேட்ஸ்மேன், இவர் மைதானங்களில் அனைத்து திசைகளிலும் ஏபிடி வில்லியர்ஸ் போல் பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ளதால் அவரை கணித்து பந்துவீச்சில் மாற்றம் செய்ய கொஞ்சம் கடினமாக உள்ளது, சூரிய குமாரர் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது அவருடைய பேட்டிங் அருமையாக இருந்தது, ஆனால் தற்பொழுது அவருடைய பேட்டிங் டெக்னிக் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது, அவருடைய தன்னம்பிக்கையும் புதுவிதமான சில ஷாட்களும் மிக அருமையாக உள்ளது” என்று சூரியகுமார் யாதவின் பேட்டிங்கை ஆடம் மில்னே பாராட்டி பேசியிருந்தார்.சூரியகுமார் யாதவ்

2021 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை விளையாட துவங்கிய சூரியகுமார் யாதவ் இதுவரை 41 டி20 போட்டிகளில் பங்கேற்று 1395 ரன்கள் அடித்துள்ளார். மேலும் டி20 தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன் என்ற ஐசிசி வரிசையில் முதலிடத்தையும் இவர் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.