இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறது வாஸ்தவம்தான், ஆனால் எதுக்கு இவர்களை நீக்குறீங்க ; இந்திய அணியை சரமாரியாக கேள்வி எழுப்பிய சுனில் கவாஸ்கர் !! 1
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறது வாஸ்தவம்தான், ஆனால் எதுக்கு இவர்களை நீக்குறீங்க ; இந்திய அணியை சரமாரியாக கேள்வி எழுப்பிய சுனில் கவாஸ்கர்..

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான இந்த இருவரை நீக்குவது சரியான முடிவு கிடையாது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் விளையாட தயாராக இருந்தும் இருவரையும் ஓரம் கட்டிய பிசிசிஐ, ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட படையை களமிறக்கி விளையாட வைத்தது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறது வாஸ்தவம்தான், ஆனால் எதுக்கு இவர்களை நீக்குறீங்க ; இந்திய அணியை சரமாரியாக கேள்வி எழுப்பிய சுனில் கவாஸ்கர் !! 2

அந்த சமயத்திலேயே டி20 தொடருக்கான இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு சீனியர் வீரர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறது வாஸ்தவம்தான், ஆனால் எதுக்கு இவர்களை நீக்குறீங்க ; இந்திய அணியை சரமாரியாக கேள்வி எழுப்பிய சுனில் கவாஸ்கர் !! 3

இதனால் பிசிசிஐ., சீனியர் வீரர்களை ஓரங்கட்ட நினைக்கும் இந்த முடிவு சரிதானா..? அல்லது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருடைய நீக்கம் இந்திய அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளதா..? என்பது போன்ற விவாதம் இந்திய கிரிக்கெட் மத்தியில் நிலவி வருகிறது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி செய்யும் தவறுகளை மேற்கோள் காட்டி அதற்கு தகுந்த பதிலடிகளை கொடுத்து வரும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்., பிசிசிஐ-யை எடுத்திருக்கும் இந்த முடிவு குறித்து தன்னுடைய கண்டனத்தை செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

இது குறித்து சுனில் கவாஸ்கர் தெரிவித்ததாவது, “2024 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தேர்வு குழு., இளம் வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என நினைக்கிறது. ஆனால் அந்தவொரு காரணத்திற்காக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு வீரர்களை ஓரம் கட்டி விட முடியாது. இந்த இரண்டு சீனியர் வீரர்கள் இந்த முழு வருடமும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர்களை நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் முக்கியமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பதால் அவர்களுக்கு கொடுத்திருக்கும் பத்து நாள் ஓய்வு என்பது தேவையானது தான் என நினைக்கிறேன். ஆனால் அவர்களை டி20 தொடரில் விளையாட வைக்க வேண்டும்” எனவும் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *