சஞ்சு சாம்சன்
நீங்க பண்றது கொஞ்சம் கூட நியாயம் இல்ல,இந்திய அணியின் செயலை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் …

நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியின் இடம் மறுக்கப்பட்டது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொடரில் என்னதான் இந்திய அணி 1-0 வெற்றி பெற்றாலும்,வெற்றியை கொண்டாடாமல் இந்திய அணி ஏன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பை மறுத்து வருகிறது..? என்ற குரல் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் பேச பொருளாக உள்ளது.

நீங்க பண்றது கொஞ்சம் கூட நியாயம் இல்ல,இந்திய அணியின் செயலை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் !! 1

குறிப்பாக மோசமாக விளையாடிய ரிஷப் பண்ட்டை அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து விட்டு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் சஞ்சு சாம்சனை புறக்கணிப்பதில் ஏதாவது அரசியல் உள்ளதா..? என்பது போன்ற கருத்துக்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் உட்பட ரசிகர்கள் மனதினும் கேள்வியாக எழுந்துள்ளது.

 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் குறித்து அதிகப்படியான கருத்துக்களை தன்னுடைய யூடியூப் சேனலின் வாயிலாக தெரியப்படுத்தி வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா, பாகிஸ்தான் அணியில் நடப்பது போன்றே விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று இந்திய அணியை குற்றம் சாட்டியுள்ளார்.

நீங்க பண்றது கொஞ்சம் கூட நியாயம் இல்ல,இந்திய அணியின் செயலை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் !! 2

இதுகுறித்து டேனிஷ் கனரியா பேசுகையில், “ரிஷப் பன்ட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது சஞ்சு சம்சனை அணியில் இணைத்திருக்க வேண்டும். சஞ்சு சாம்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார். இருந்தபோதும் இவரை உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கவில்லை. இதனால் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் இது சில அதிர்வலைகளை ஏற்படுத்தியது நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்வதெல்லாம் சந்தோஷம் ஒரு மிகச்சிறந்த வீரர் அவருக்கு இருக்கும் திறமை உண்மையிலேயே சிறப்பானது, பாகிஸ்தான் அணியின் இருக்கும் விருப்பு வெறுப்புகளை கொடுத்து நாம் பேசி இருக்கிறோம் அதேபோன்று இந்திய அணியிலும் வெறுப்பு மற்றும் வெறுப்பின் அடிப்படையில் அணி கட்டமைக்கப்படுகிறதோ என்ற பார்வை நமக்கு தோன்றுகிறது” என்று டேனிஷ் கனரியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *