இந்தியா vs நியூசிலாந்து டி.20 தொடர்; இந்திய வீரர்களுக்கான ரேட்டிங் 

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியுடனான இந்த டி.20 தொடரில் விளையாடிய இந்திய வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கான ரேட்டிங் குறித்தும் இங்கு பார்ப்போம்.

ஷிகர் தவான் – 6/10

ஒருநாள் தொடரில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்ட ஷிகர் தவான் டி.20 தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

ரோஹித் சர்மா – 7/10

கேப்டனான ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியை மற்ற இரண்டு போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை.

விஜய் சங்கர் – 8/10

இளம் வீரரான விஜய் சங்கர் இந்த தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டார் என்பதில் மாற்று கருத்து இல்லை.

தோனி – 7/10

முன்னாள் கேப்டனான தோனி ஒருநாள் தொடரை போலவே டி.20 தொடரிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிக சரியாக செய்து கொடுத்தார் என்பதில் சந்தேகம் இல்லை.

ரிஷப் பண்ட் – 8/10

இளம் வீரரான ரிஷப் பண்ட் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிகச்சரியாக செய்து கொடுத்தார்.

தினேஷ் கார்த்திக் – 6/10

தினேஷ் கார்த்திக் ஓரளவிற்கு தனது பங்களிப்பை சரியாக செய்தார் என்றாலும் அவர் தன்னை மேலும் முன்னேற்றி கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

ஹர்திக் பாண்டியா – 8/10

கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவேளைக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் ஹர்திக் பாண்டியா, இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.

க்ரூணல் பாண்டியா – 8/10

ஹர்திக் பாண்டியாவின் சகோதரான க்ரூணல் பாண்டியாவும் இந்த தொடரில் தனது பங்களிப்பை மிகச்சரியாக செய்து கொடுத்தார்.

புவனேஷ்வர் குமார் – 7/10

வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் இந்த தொடரின் அனைத்து போட்டியிலும் தனது பங்களிப்பை மிகச்சரியாகவே செய்து கொடுத்தார்.

யுஸ்வேந்திர சாஹல் – 7/10

யுஸ்வேந்திர சாஹல் ஓரளவிற்கு தனது பங்களிப்பை சரியாகவே செய்து கொடுத்தார்.

குல்தீப் யாதவ் – 6/10

சைனாமேன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாகவே செய்து கொடுத்தார்.

கலீல் அஹமது – 6/10

இளம் வீரரான கலீல் அஹமதிற்கு இந்த தொடரில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. • SHARE

  விவரம் காண

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

  அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

  புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...