இந்த பையனுக்கு இப்பவாச்சும் இடம் கொடுங்க... யுஸ்வேந்திர சாஹல் வேண்டும்; முதல் ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் !! 1
இந்த பையனுக்கு இப்பவாச்சும் இடம் கொடுங்க… யுஸ்வேந்திர சாஹல் வேண்டும்; முதல் ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர்

முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டிக்கான அவரது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்திய அணி

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி நடைபெற உள்ளது. டி.20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தியதை போன்று, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்த உள்ளார்.

இந்த பையனுக்கு இப்பவாச்சும் இடம் கொடுங்க... யுஸ்வேந்திர சாஹல் வேண்டும்; முதல் ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் !! 2

ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் பலர் இல்லாத இந்திய அணி, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில், முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டிக்கான அவரது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்த பையனுக்கு இப்பவாச்சும் இடம் கொடுங்க... யுஸ்வேந்திர சாஹல் வேண்டும்; முதல் ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் !! 3

வாசிம் ஜாபர் தனது அணியின் துவக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் தீபக் ஹூடா மற்றும் வாசிங்டன் சுந்தரை தேர்வு செய்துள்ள வாசிம் ஜாபர், யுஸ்வேந்திர சாஹலை விட வாசிங்டன் சுந்தருக்கு இடம் கொடுப்பதே இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலு சேர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பையனுக்கு இப்பவாச்சும் இடம் கொடுங்க... யுஸ்வேந்திர சாஹல் வேண்டும்; முதல் ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் !! 4

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், அர்ஸ்தீப் சிங் ஆகியோரை தேர்வு செய்துள்ள வாசிம் ஜாபர், அடுத்ததாக உம்ரன் மாலிக்கை தனது அணியில் தேர்வு செய்துள்ளார். டி.20 போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளில் உம்ரன் மாலிக்கின் பந்துவீச்சு சரியாக இருக்கும் என்றும் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாபர் தேர்வு செய்த முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;

ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக்.

Leave a comment

Your email address will not be published.