உம்ரான் மாலிக் அணியில இருக்கிறது, ஒட்டுமொத்த இந்திய அணிக்கே மாஸா இருக்கு ; இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஓபன் டாக் !! 1
உம்ரான் மாலிக் அணியில இருக்கிறது, ஒட்டுமொத்த இந்திய அணிக்கே மாஸா இருக்கு ; இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஓபன் டாக்..

இந்திய அணியில் உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளதால் இந்திய அணியின் தரமே அதிகரித்துள்ளது என்று இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.

2022 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி தன்னுடைய அபாரமான வேகத்தால் இந்திய அணி கால் பதித்த இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், அடுத்தடுத்த போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிக சரியாக பயன்படுத்தி தற்போது லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணி ரெகுலர் வீரராக திகழ்கிறார்.

உம்ரான் மாலிக் அணியில இருக்கிறது, ஒட்டுமொத்த இந்திய அணிக்கே மாஸா இருக்கு ; இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஓபன் டாக் !! 2

சர்வ சாதாரணமாக 150+ வேகத்தில் பந்து வீசக்கூடிய திறமை படைத்த உம்ரான் மாலிக் தான் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் இந்திய அணிக்கு தேவைப்படும் நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவாகி வருகிறார்.

 

இப்படி அபாரமான வேகப்பந்து வீச்சால் உலக கிரிக்கெட்டின் உச்சம் பெற்று வரும் உம்ரன் மாலிக்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

உம்ரான் மாலிக் அணியில இருக்கிறது, ஒட்டுமொத்த இந்திய அணிக்கே மாஸா இருக்கு ; இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஓபன் டாக் !! 3

அந்த வகையில் தற்போதைய இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக திகழும் பரஸ் மம்ப்ரே இந்திய அணியில் உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளதால் இந்திய அணியின் தரமே அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது என்றும் எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் மூன்றாம் மாலிக்கு இடம் பெறுவார் என்றும் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.

உம்ரான் மாலிக் அணியில இருக்கிறது, ஒட்டுமொத்த இந்திய அணிக்கே மாஸா இருக்கு ; இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஓபன் டாக் !! 4

இதுகுறித்து பரஸ் மாம்ப்ரே தெரிவித்ததாவது, “உம்ரான் மாலிக் தன்னை தானே பக்குவப்படுத்திக் கொண்ட விதத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது, சர்வதேச போட்டியில் பந்துவீச்சின் வேகத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது, இது எதிரணியை நிச்சயம் கலங்கடிக்கும்.இதனால் உம்ரான் மலிக்கிர்க்கு அணியில் நிச்சயம் இடம் உள்ளது. ஆனால் அவர் இந்திய அணியில் விளையாடு வைக்கப்படுவாரா என்பது மைதானத்தை பொருத்தும் மற்றும் அணியின் காம்பினேஷனை பொருத்தே அமையும், ஆனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உம்ரன் மாலிக் நிச்சயம் இடம் பெறுவார். அவர் இந்திய அணியில் இருப்பதால் இந்திய அணியின் வேல்யூ கூடியுள்ளது” என்று பவுலிங் பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *