வீடியோ ; தப்பு பண்ணிட்டீங்களே தம்பி… சரியான நேரத்தில் இந்திய அணிக்கு விக்கெட்டை எடுத்து கொடுத்த தீபக் ஹூடா
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் இரண்டு துவக்க வீரர்களும் தலா 11 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் பெரிதாக சோபிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து நடையை கட்டினர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் மிட்செல் சாட்னர் (19*), பிரேஸ்வெல் (14) மற்றும் சாப்மன் (14) ஆகிய மூவரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க கூட ரன்னை தாண்டாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள நியூசிலாந்து அணி வெறும் 99 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிவம் மாவியை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.