இங்கிலாந்துல அடிச்ச அடி நியாபகம் இருக்குல... அது தான் நியூசிலாந்து அணிக்கும்; அதிரடியாக பேசிய புஜாரா !! 1

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியதை போன்று, நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பயமில்லாத விளையாட்டை வெளிப்படுத்த காத்திருப்பதாக புஜாரா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி துவங்க உள்ளது.

இங்கிலாந்துல அடிச்ச அடி நியாபகம் இருக்குல... அது தான் நியூசிலாந்து அணிக்கும்; அதிரடியாக பேசிய புஜாரா !! 2

டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் விளையாட்டை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இரு அணிகள் இடையேயான முதல் போட்டி நாளை துவங்க உள்ளதால், இரு அணி வீரர்களும் இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதே போல் சவால் நிறைந்த இந்த தொடருக்கான தங்களது எதிர்பார்ப்புகளையும் இரு அணியின் சீனியர் வீரர்களும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்துல அடிச்ச அடி நியாபகம் இருக்குல... அது தான் நியூசிலாந்து அணிக்கும்; அதிரடியாக பேசிய புஜாரா !! 3

அந்தவகையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து புஜாரா பேசுகையில், “நான் 50, 80, 90 ரன்களில் ஆட்டமிழந்து வருகிறேன். எப்போதும் போல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். சதம் அடிக்கவில்லை என்று எனக்கும் தெரியும். ஆனால் அதை பற்றி கவலைப்படவில்லை. அணியின் ஸ்கோரை உயர்த்துவதிலேயே என் கவனம் இருக்கும். அப்படி விளையாடினால் நிச்சயமாக சதமும் அடிக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

இங்கிலாந்துல அடிச்ச அடி நியாபகம் இருக்குல... அது தான் நியூசிலாந்து அணிக்கும்; அதிரடியாக பேசிய புஜாரா !! 4

மேலும் பேசிய புஜாரா, “எனது டெக்னிக்கில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். சதம் அடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தால், அது நமது பேட்டிங் திறனை பாதிக்கும். கொஞ்சம் பயமின்றி இங்கிலாந்தில் விளையாடினேன். அதே போன்ற மனநிலையில் தான் இந்த தொடரிலும் உள்ளேன்” என்று கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *