இப்ப புது டெக்னிக் கத்துகிட்டென், தன்னுடைய பந்துவீச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசிய உம்ரான் மாலிக் !! 1
இப்ப புது டெக்னிக் கத்துகிட்டென், தன்னுடைய பந்துவீச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசிய உம்ரான் மாலிக் …

புதுவிதமான பந்துவீச்சை மேம்படுத்திக் கொண்டு வருவதாக இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் தெரிவித்துள்ளார்.

2022 ஐபிஎல் தொடரில் தன்னுடைய அபாரமான வேகத்தால் அனைவரையும் ஆச்சாரத்திற்குள்ளான உம்ரன் மாலிக், ஆஸ்திரேலிய மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பையில் சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்ப புது டெக்னிக் கத்துகிட்டென், தன்னுடைய பந்துவீச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசிய உம்ரான் மாலிக் !! 2

சுனில் கவாஸ்கர், ஹர்பஜன்சிங் போன்ற முன்னாள் வீரர்கள் இந்திய அணியில் உம்ரான் மாலிக்கை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில் இவரை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கவில்லை.

போதுமான அனுபவம் இவருக்கு இல்லை என்பதால் இவரை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் ஸ்டாண்ட்-பை வீரராக கூட இந்திய அணி தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

இப்ப புது டெக்னிக் கத்துகிட்டென், தன்னுடைய பந்துவீச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசிய உம்ரான் மாலிக் !! 3

ஆனால் இவரிடம் தனித்துவமான வேகம் இருப்பதால் இவரை இந்திய அணி மிக முக்கிய வீரராகவே பார்த்து வருகிறது. இதனால் இவருக்கு இருதரப்பு தொடரில் அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்திய அணியில் தேர்ந்தெடுத்து வருகிறது.

அந்த வகையில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் உம்ரான் மாலிக் முதல் இரண்டு போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்றாலும், மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இப்ப புது டெக்னிக் கத்துகிட்டென், தன்னுடைய பந்துவீச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து வெளிப்படையாக பேசிய உம்ரான் மாலிக் !! 4

இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விதமான விஷயங்களை வெளிப்படையாக பேசி வரும் உம்ரான் மாலிக், தன்னுடைய பந்துவீச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து உம்ரான் மாலிக் பேசுகையில்,,“தற்போது புதுவினமான பந்துவீச்சு மேம்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகிறேன், குறிப்பாக t20 போட்டிகளில் ஸ்லோயர் மற்றும் யாக்கர் பந்துகள் வீசுவதற்கு அதிக முயற்சிகள் செய்கிறேன். தற்போது குட் லெந்த் மட்டும் ஹார்ட் லெந்த்தில் பந்து வீசுவதில் சற்று முன்னேற்றம் கண்டுள்ளேன். என்னுடைய பயிற்சியாளர்களோடு சேர்ந்து கடினமாக முயற்சி செய்வது மிகவும் சந்தோசமாக உள்ளது, தற்போது நான் NCAவின் வேகப்பந்து பயிற்சியாளரான டிராய்வுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன், இந்த பயிற்சி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இங்கு இருக்கும் அனேக மக்களிடமிருந்து அதிக அனுபவங்களை கற்று வருகிறேன், மேலும் பயிற்சியால் ஏற்படும் துள்ளியத்தையும் என்னால் உணர முடிகிறது, எவ்வளவு அதிகமாக என்னால் பந்து வீச முடிகிறதோ அந்த அளவிற்கு வேகமாக வீச வேண்டும், அதேபோன்று பந்துவீச்சில் சில வேரியேஷன்களையும் செய்ய வேண்டும்” என்று உம்ரான் மாலிக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.