இரண்டு முக்கிய வீரர்கள் அதிரடி நீக்கம்… பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணி இது தான்
பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன.
பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ள இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்க உள்ளது.
கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, முக்கியமான இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. இதனால் நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலாவது பாகிஸ்தானிற்கு இந்திய அணி சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் நிச்சயம் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்கில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி மற்றும் சூர்யகுமா யாதவ் ஆகியோரே வழக்கம் போல் இடம்பெறுவார்கள்.
விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கிற்கே அணியில் இடம் கிடைக்கும் என தெரிகிறது. ஆல் ரவுண்டர்கள் வரிசையில் அஸ்வினுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்ஷர் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் வரிசையில் யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அடுத்ததாக முகமது ஷமியா, ஹர்சல் பட்டேலா என்பதில் மட்டும் குழுப்பம் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய தகவல்களின் அடிப்படையில் ஹர்ஷல் பட்டேலை விட முகமது ஷமி ஆடும் லெவனில் இடம்பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.
பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், முகமது ஷமி.