ஐபிஎல் தொடர் அவ்வளவு முக்கியமா..? விராட் கோலி செய்யும் பெரிய தப்பே இது தான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுப்பது சரியான முறை அல்ல என முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் முடி சூடா மன்னாக திகழ்ந்து வந்த விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மிக கடுமையான விமர்ச்சனங்களையும் விராட் கோலி எதிர்கொண்டு வருகிறார்.

ஐபிஎல் தொடர் அவ்வளவு முக்கியமா..? விராட் கோலி செய்யும் பெரிய தப்பே இது தான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

இந்திய அணியின் அசைக்க முடியாக நம்பிக்கையாக திகழ்ந்து வந்த விராட் கோலிக்கு, இனி இந்திய அணியில் இடமே கொடுக்க கூடாது, அது இந்திய அணியை பலவீனப்படுத்தும் என முன்னாள் வீரர்கள் பலர் பகிரங்கமாக பேசி வருகின்றனர். பிசிசிஐ.,யும் விராட் கோலிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்து வருகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

விண்டீஸ் அணிக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்துள்ள விராட் கோலி, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரிலாவது தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், விராட் கோலி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா, பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் விராட் கோலி, சர்வதேச போட்டிகளை தவிர்ப்பது சரியான முறை அல்ல என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் அவ்வளவு முக்கியமா..? விராட் கோலி செய்யும் பெரிய தப்பே இது தான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவது இந்திய அணிக்கு நல்லதல்ல. கடந்த 2021ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு விராட் கோலி தொடர்ந்து பல பிரச்சனைகளை மட்டுமே சந்தித்து வருகிறார். விராட் கோலி அவரது பேட்டிங்கில் முழு கவனத்தை செலுத்த வேண்டும் என கருதுகிறேன், பேட்டிங்கில் மட்டும் அவர் தனது முழு கவனத்தையும் செலுத்தினால் மட்டுமே அவரால் அடுத்த சில வருடங்களுக்காவது இந்திய அணிக்காக விளையாட முடியும். அதே போல் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாடும் விராட் கோலி, சர்வதேச போட்டிகளை புறக்கணித்து ஓய்வு எடுத்து கொள்வது சரியானது அல்ல. ஐபிஎல் தொடரை புறக்கணித்துவிட்டு சர்வத்ஹேச போட்டிகளில் கவனம் செலுத்துவதே விராட் கோலிக்கும், இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும். சர்வதேச போட்டிகளின் மூலமே அதிக அனுபவங்கள் கிடைக்கும், அதுவே விராட் கோலி தனது பழைய பார்மிற்கு திரும்புவதற்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.