இனி இந்த பையான விடவே மாட்டோம்; இளம் வீரரை பாராட்டி பேசிய ராகுல் டிராவிட் !! 1

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய தீபக் சாஹரை, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது.

இனி இந்த பையான விடவே மாட்டோம்; இளம் வீரரை பாராட்டி பேசிய ராகுல் டிராவிட் !! 2

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக டி காக் 124 ரன்களும், வென் டர் டூசன் 52 ரன்களும் எடுத்தனர்.

இனி இந்த பையான விடவே மாட்டோம்; இளம் வீரரை பாராட்டி பேசிய ராகுல் டிராவிட் !! 3

இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (61), விராட் கோலி (65) மற்றும் கடைசி நேரத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் சாஹர் (54) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொடுத்தாலும், வழக்கம் போல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஆட்டத்தால் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி 4 ரன்னில் வெற்றியை தவறவிட்டது.

இனி இந்த பையான விடவே மாட்டோம்; இளம் வீரரை பாராட்டி பேசிய ராகுல் டிராவிட் !! 4

இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், தென் ஆப்ரிக்கா அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும், சீனியர் பேட்ஸ்மேன்கள் பலர் சொதப்பிய போதிலும், தன்னால் முடிந்தவரை இந்திய அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடிய தீபக் சாஹரை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் புகழ்ந்து பேசி வருகிறது. அந்தவகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டும், தீபக் சாஹரை பாராட்டி பேசியுள்ளார்.

இனி இந்த பையான விடவே மாட்டோம்; இளம் வீரரை பாராட்டி பேசிய ராகுல் டிராவிட் !! 5

இது குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், “தீபக் சாஹர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் தீபக் சாஹர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொடுத்தார். பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் தீபக் சாஹர் சிறப்பாக செயல்படுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான். தீபக் சாஹர் India A அணிக்காக விளையாடியதில் இருந்தே அவரை பார்த்து வருகிறேன், அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். தீபக் சாஹருக்கு இன்னும் கூடுதலான வாய்ப்புகள் வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

இனி இந்த பையான விடவே மாட்டோம்; இளம் வீரரை பாராட்டி பேசிய ராகுல் டிராவிட் !! 6

மேலும் பேசிய ராகுல் டிராவிட், “ஷர்துல் தாகூரும் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியிலும் அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இவர்களை போன்ற வீரர்கள் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். இருவருக்கும் அடுத்தடுத்த தொடர்களில் கூடுதல் வாய்ப்புகள் வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *