செஞ்சூரியன் டெஸ்ட்: முதல்நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 269-6

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். லீவ் செய்யக்கூடிய பந்தை லீவ் செய்து. அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடினார்கள். டீன் எல்கர் நிதானமாக விளையாட மார்கிராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சொந்த மைதானத்தில் பந்து எப்படி வரும் என்பதை துள்ளியமாக அறிந்த வைத்திருக்கும் மார்கிராம் 81 பந்தில் 9 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் 27 ஓவரில் 78 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 26 ரன்னுடனும், மார்கிராம் 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா 85 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. டீன் எல்கர் 31 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார்.
மார்கிராம் உடன் இணைந்து அம்லா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்தில் அம்லா அடித்த பந்து ஹர்திக் பாண்டியாவை நோக்கி சென்றது. பந்து சற்று விலகிச் சென்றதால் கேட்ச் ஆக மாறாமல் அம்லா தப்பித்தார். மறுமுனையில் விளையாடிய மார்கிராம் 94 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சொந்த மைதானத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பு இழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு அம்லா உடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். 51-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அம்லா கொடுத்த கேட்ச்-ஐ பார்தீவ் பட்டேல் பிடிக்க தவறினார். இதனால் 30 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார். டிவில்லியர்ஸ் 20 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில் ஸ்டெம்புகள் சிதற அவுட் ஆனார்.  அதன்பின் கேப்டன் டு பிளிசிஸ், அம்லாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார்.
அரைசதம் கடந்த அம்லா, 82 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டீ காக் முதல் பந்திலேயே விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். டீ காக் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அடுத்ததாக களமிறங்கிய வெர்னான் பிலாண்டர் ரன் அவுட் ஆனார்.

அதைத்தொடர்ந்து டு பிளிசிஸ், கேஷவ் மகராஜ் இணைந்து விக்கெட் இழப்பை கட்டுப்படுத்த போராடினர். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்ரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. டு பிளிசிஸ் 24 ரன்களுடனும், கேஷவ் மகராஜ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி பந்துவீச்சில் அஷ்வின் 3 விக்கெட்களும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். • SHARE
  Just a normal human being with some passion on Cricket. And am a Civil Engineer, YouTuber, Freelancer, Former Junior Engineer Govt.Of India, UPSC Aspirant.

  விவரம் காண

  சர்வதேச டி.20 தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் சாஹல் !!

  சர்வதேச டி.20 தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் சாஹல் டி.20 அரங்கிற்கான ஐ.சி.சி.,யின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 12வது...

  முத்தரப்பு தொடரின் இறுதி போட்டி.. கணிக்கப்பட்ட இரு அணிகளின் ஆடும் லெவன் !

  முத்தரப்பு தொடரின் இறுதி போட்டி.. கணிக்கப்பட்ட இரு அணிகளின் ஆடும் லெவன் இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான...

  இறுதி போட்டியில் வெல்லப்போது யார்.. பழைய வரலாறுகள் சொல்வது என்ன..?

  இறுதி போட்டியில் வெல்லப்போது யார்.. பழைய வரலாறுகள் சொல்வது என்ன..? முத்தரப்பு டி.20 தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி  பெற்றுள்ள இந்தியா வங்கதேசம் இடையேயான...

  முத்தரப்பு தொடரில் முடி சூடப்போவது யார்…? நாளை இறுதி போட்டி !

  முத்தரப்பு தொடரில் முடி சூடப்போவது யார்...? நாளை இறுதி போட்டி முத்தரப்பு டி.20 தொடரில் இறுதி போட்டிக்கு தகுதி  பெற்றுள்ள இந்தியா வங்கதேசம் இடையேயான...

  இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மல்லுக்கட்ட போவது யார்..? முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை !!

  இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மல்லுக்கட்ட போவது யார்..? முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை முத்தரப்பு டி.20 தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய...