மூன்றாவது ஒருநாள் போட்டி… கணிக்கப்பட்ட இந்திய அணி
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
கேப்டவுனில் நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டியில், கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்ட இந்திய அணியின் ஆடும் லெவனை இங்கு பார்போம்.
ரோஹித் சர்மா;
முதல் இரண்டு போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரோஹித் சர்மா விளையாடா விட்டாலும், முந்தைய தொடர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்தது. ரோஹித் சர்மா அடுத்த போட்டியிலாவது மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.