தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் படுதோல்வியால் இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் கடும் விமர்ச்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85 ரன்களும், கே.எல் ராகுல் 55 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி, போட்டியின் முதல் ஓவரில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக அடித்து விளையாடியது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் 66 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். மற்றொரு துவக்க வீரரான ஜென்னாமென் மாலன் 91 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் வந்த டெம்பா பவுமா (35), மார்கரம் (37*) மற்றும் வான் டெர் டூசன் (37*) என அனைத்து வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 48.1 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.
சமகால கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக அறியப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த மோசமான தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்திய அணியின் இந்த தோல்விக்கு கே.எல் ராகுலின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என கடுமையாக வசைபாடி வருகின்றனர். இனி இந்திய அணி கே.எல் ராகுலிடம் கேப்டன்சியை ஒப்படைக்கும் முடிவை ஒரு போதும் எடுக்கவே கூடாது எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதில் சில;
What a start for both Rahuls !!
🤦😅#INDvsSA #Cricket— Sreejith (@sreereads) January 21, 2022
Kl Rahul : "Winning or loosing is not in our hand" 😭😭😭😭😭😭😭😭
— Lucky ❤️✨ (@LBerojya) January 21, 2022
With the series lost, KL and think tank must consider giving the likes of Gaikwad, Siraj and Deepak Chahar a chance in the final game. Open w Gaikwad (rest Kohli) , KL can drop to 5 and Deepak replaces Bhuvi, Siraj comes in place of Bumrah, who could use some rest #INDvsSA
— Ayan (@ayan_acharya13) January 21, 2022
KL Rahul looking at his Captaincy skills🤣 pic.twitter.com/Vs1wtjduR5
— Shivani (@meme_ki_diwani) January 21, 2022
Ashwin and Bhuvi need to make way for others in limited overs cricket,KL Rahul is far from ready to take over captaincy and long term replacement for Rohit has to be decided now.
— Ayaskanta Mohanty (@21Mohanty) January 21, 2022
Well Played KL Rahul, Academy is proud of you❤️
Strike Rate-69🙂
#INDvSA pic.twitter.com/0URxoExuDL— TukTuk Academy (@TukTuk_Academy) January 21, 2022