அசுர வேகத்தில் 1000 ரன்கள்... டி.20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ் !! 1

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியின் மூலம் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

அசுர வேகத்தில் 1000 ரன்கள்... டி.20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ் !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல் ராகுல் 57 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர்.

அசுர வேகத்தில் 1000 ரன்கள்... டி.20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ் !! 3

இதன்பின் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு 2 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கரம் 33 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த டேவிட் மில்லர் – குவிண்டன் டி காக் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. கடைசி ஓவர் வரை இந்திய அணிக்கு பயம் காட்டிய டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார்.

அசுர வேகத்தில் 1000 ரன்கள்... டி.20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ் !! 4

இறுதி வரை ஆட்டமிழக்காமல் டேவிட் மில்லர் 106 ரன்களும், டேவிட் மில்லர் 48 பந்துகளில் 69 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்த தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

இந்தநிலையில், இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 61 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இதன் மூலம், டி.20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த போட்டியின் மூலம் டி.20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்த சூர்யகுமார் யாதவ், இதன் மூலம் டி.20 போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்கள் வரிசையில், கிளன் மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

மிக குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியல்;

சூர்யகுமார் யாதவ் – 573 ரன்கள்
கிளன் மேக்ஸ்வெல் – 604 ரன்கள்
காலின் முன்ரோ – 635 பந்துகள்
ஈவன் லீவிஸ் – 640 பந்துகள்
பெரேரா – 654 பந்துகள்

Leave a comment

Your email address will not be published.