தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்... ஆனால் இந்த மூனு பேர நினைச்சா பெருமையா இருக்கு; ஷிகர் தவான் சொல்கிறார் !! 1

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் விளையாடிய விதம் மகிழ்ச்சியளிப்பதாக கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்... ஆனால் இந்த மூனு பேர நினைச்சா பெருமையா இருக்கு; ஷிகர் தவான் சொல்கிறார் !! 2

இந்த தொடரின் முதல் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டதால் போட்டியின் ஓவர்கள் தலா 40 ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 75* ரன்களும், கிளாசன் 74* ரன்களும் எடுத்தனர்.

தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்... ஆனால் இந்த மூனு பேர நினைச்சா பெருமையா இருக்கு; ஷிகர் தவான் சொல்கிறார் !! 3

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவி பிஸ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (4) மற்றும் சுப்மன் கில் (3) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் பின்னடைவை கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் (19), இஷான் கிஷன் (20) ஆகியோரும் கிடைத்த வாய்ப்பை வீணடித்தனர். இதன்பின் களத்திற்கு வந்த ஸ்ரேயஸ் ஐயர் (50), ஷர்துல் தாகூர் (33) மற்றும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் (86) ஆகியோர் தங்களது பங்களிப்பை மிக சரியாக செய்தாலும், துவக்கத்தில் இந்திய வீரர்கள் ரன் குவிக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.

தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்... ஆனால் இந்த மூனு பேர நினைச்சா பெருமையா இருக்கு; ஷிகர் தவான் சொல்கிறார் !! 4

இந்தநிலையில், தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான், தோல்வியடைந்திருந்தாலும் சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஷிகர் தவான் பேசுகையில், “எங்கள் வீரர்கள் இறுதி வரை நம்பிக்கையுடன் போராடியது மகிழ்யளிக்கிறது. குறிப்பாக சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் மிக சிறப்பாக பேட்டிங் செய்தனர், அவர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். நாங்கள் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கொடுக்க தவறிவிட்டோம், ஆனால் மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தனர். பீல்டிங்கில் நாங்கள் இந்த போட்டியில் சரியாக செயல்படவில்லை, இருந்தாலும் இதுவும் ஒரு அனுபவம் தான். தவறுகளை நிச்சயம் சரி செய்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.