வீடியோ; துல்லியமான த்ரோ... முக்கியமான நேரத்தில் குவிண்டன் டி காக்கின் விக்கெட்டை தட்டி தூக்கிய ஸ்ரேயஸ் ஐயர் !! 1

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

வீடியோ; துல்லியமான த்ரோ... முக்கியமான நேரத்தில் குவிண்டன் டி காக்கின் விக்கெட்டை தட்டி தூக்கிய ஸ்ரேயஸ் ஐயர் !! 2

இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் அந்த அணியின் கேப்டனும், துவக்க வீரருமான டெம்பா பவுமா 3 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டி காக் இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

வீடியோ; துல்லியமான த்ரோ... முக்கியமான நேரத்தில் குவிண்டன் டி காக்கின் விக்கெட்டை தட்டி தூக்கிய ஸ்ரேயஸ் ஐயர் !! 3

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரிலே ருச்சோவ் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி வரை விக்கெட்டும் இழக்காமல் 48 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம், கடைசி ஓவரில் களத்திற்கு வந்த மிரட்டல் நாயகன் மில்லர் 5 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள தென் ஆப்ரிக்கா அணி 227 ரன்கள் குவித்துள்ளது.

வீடியோ; துல்லியமான த்ரோ... முக்கியமான நேரத்தில் குவிண்டன் டி காக்கின் விக்கெட்டை தட்டி தூக்கிய ஸ்ரேயஸ் ஐயர் !! 4

இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

டி காக் விக்கெட்டை இழந்த வீடியோ இங்கே;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *