ஜடேஜா கிடையாது, நீ வேணாம்னு நினைச்சாலும் இந்த 2 சுழற்பந்து வீச்சாளர்களை உன்னால் புறக்கணிக்க முடியாது ; 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் குறித்து வெளிப்படையாக பேசிய முன்னாள் வீரர்..
2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்த 2 சுழற்பந்து வீச்சாளர்களையும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு(2023) அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பையை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்து நடத்துகிறது.
நான்காவது முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் 50-ஓவர் உலகக் கோப்பையை நடத்துகிறது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு எடுத்து நடத்தியது. அப்போதுதான் இந்திய அணியும் கடைசியாக உலககோப்பையை வென்றது.
அதற்கு அடுத்ததாக, 2015 மற்றும் 2019 உலககோப்பைகளில் இந்திய அணி வெற்றி பெறும் அணியாக கருதப்பட்டது. ஆனால் கடைசியில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இம்முறை கோப்பையை வென்று மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெருமிதம் சேர்க்க வேண்டும் என்று பல திட்டங்களை பிசிசிஐ செயல்படுத்தி வருகிறது.
அந்த திட்டத்தில் ஒன்றாக, ரோகித் சர்மா மற்றும் டிராவிட் உடன் பிசிசிஐ நடத்திய ஆலோசனையில் குறிப்பிட்ட 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒன்பது மாதத்திற்கு உலகக்கோப்பை வரை அவர்கள் மட்டுமே மாறி மாறி பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள் என திட்டமிடப்பட்டிருக்கிறது. இன்னும் இந்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிடவில்லை.
இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் அந்த 20 வீரர்களின் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற்றால் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக மாறும் எனவும் எந்த வீரர்களெல்லாம் அணிக்கு தேவையில்லை என்றும் தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணி குறித்தும், இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா., எதிர்வரும் 2023 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர் ரவி அஸ்வினை விளையாட வைக்க வேண்டும் என தன்னுடைய கருத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதுகுறிப்பு அஜய் ஜடேஜா தெரிவித்ததாவது, “நானாக இருந்தால் நிச்சயம் எதிர்வரும் 2023 ஒரு நாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை விளையாட வைப்பேன், ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் சுழற் பந்துவீச்சு என்பது மிக முக்கியமான ஒன்றாகும், தற்போதைய நிலையில் சஹால் இந்திய அணிக்கு விளையாட தேவையில்லை. ஆனால் உலகக் கோப்பை தொடரில், சஹால் மற்றும் அஸ்வின் நிச்சயம் விளையாட வேண்டும். நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பவில்லை என்றாலும் சரி அவர்கள் தான் உலகக்கோப்பை தொடருக்கான சரியான வீரர்கள்” என அஜய் ஜடேஜா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.