உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு இந்த முன்னாள் ஜாம்பவானை நினைவுபடுத்துகிறது ; முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டு !! 1
உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு இந்த முன்னாள் ஜாம்பவானை நினைவுபடுத்துகிறது ; முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டு ..

உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு இந்த ஜாம்பாவனை ஞாபகப்படுத்துகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் தன்னுடைய அபாரமான வேகத்தால் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டையும் தன் பக்கம் திருப்பிய இந்திய அணியின் இளம் மிகப் பந்துவீச்சாளர் உமரான் மாலிக், ஐபிஎல் தொடருக்குப்பின் இந்திய அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார்.

உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு இந்த முன்னாள் ஜாம்பவானை நினைவுபடுத்துகிறது ; முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டு !! 2

2022 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இவரை சேர்த்திருக்க வேண்டும் என விவாதம் ஏற்படுத்தும் வகையில் இவருடைய வேகம் தனித்துவமாக இருந்தது.ஆனால் இவருக்கு சர்வதேச போட்டியில் அனுபவம் குறைவாக இருப்பதால் இவரை தயார்படுத்தும் நோக்கில் இந்திய அணி பல்வேறு விதமான தொடர்களிலும் வாய்ப்பளித்து இவரை விளையாட வைத்து வருகிறது.

சமகால கிரிக்கெட்டின் அதிவேகமாக பந்து வீசும் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் , நிச்சயம் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வேகமாக வீசப்பட்ட பந்து என்ற சோயப் அக்தரின் சாதனையை முறியடிப்பார் என்றும் கிரிக்கெட் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு இந்த முன்னாள் ஜாம்பவானை நினைவுபடுத்துகிறது ; முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டு !! 3

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் மிக சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய உம்ரான் மாலிக், டி20 தொடரில்(155) அதிவேகமாக வீசப்பட்ட பந்து என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். மேலும் இந்த தொடரின் மூன்று போட்டிகளில் பங்கேற்று 7 விக்கெட் வீழ்த்தி, இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் அதிக விக்கட்களை வீழ்த்தியும் இருக்கிறார்.

இப்படி நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருக்கும் உம்ரன் மாலிக்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு இந்த முன்னாள் ஜாம்பவானை நினைவுபடுத்துகிறது ; முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டு !! 4

அந்த வகையில் இந்திய அணி, குறித்தும் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசிவரும், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா. உம்ரான் மாலிக் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜவஹல் ஸ்ரீநாத் போன்று சிறப்பாக பந்து வீசுகிறார் என பாராட்டி பேசியுள்ளார் .

உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு இந்த முன்னாள் ஜாம்பவானை நினைவுபடுத்துகிறது ; முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டு !! 5

இதுகுறித்து அஜய் ஜடேஜா பேசுகையில்,“அவர் ஓடிவரும் விதம் மற்றும் பந்த வீசும் அந்த முறை என அனைத்தும் வெகு காலங்களுக்கு முன்பு பந்த வீசிய இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜவஹல் ஸ்ரீநாத்தை நினைவு படுத்துகிறது. உம்ரான் மாலிக்கிடம் ஏதோ தனித்துவமான திறமை உள்ளது, இதனால் அவரை அதிகம் பயன்படுத்த வேண்டும், எப்பொழுதெல்லாம் இந்திய அணிக்கு நெருக்கடி வருகிறதோ.. அப்பொழுதெல்லாம் உம்ரன் மாலிக் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் 8/10 போட்டிகளில் அவர் உங்களுக்கு மூன்று விக்கட்களை வீழ்த்தி கொடுத்து போட்டியை நிறைவு செய்வதற்கும் உதவியாக இருக்கிறார்”என அஜய் ஜடேஜா உம்ரான் மாலிக்கை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது .

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *