பந்துவீச்சில் மேஜிக் காட்டி 6 விக்கெட்டுகளையும் அள்ளிய முகமது சிராஜ்... வியந்து பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 1

பந்துவீச்சில் மேஜிக் காட்டி 6 விக்கெட்டுகளையும் அள்ளிய முகமது சிராஜ்… வியந்து பாராட்டும் கிரிக்கெட் உலகம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சிராஜிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இலங்கையின் கொழும்பில் நடைபெற்று வருகிறது.

பந்துவீச்சில் மேஜிக் காட்டி 6 விக்கெட்டுகளையும் அள்ளிய முகமது சிராஜ்... வியந்து பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 2

இந்தியா – இலங்கை இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணியின் முதல் விக்கெட்டை பும்ராஹ் முதல் ஓவரிலேயே கைப்பற்றினர்.

போட்டியின் நான்காவது ஓவரை வீசிய முகமது சிராஜ் அந்த ஒரே ஓவரில் பதும் நிஷான்கா (2) , சமரவிக்ரமே (0), அஸலன்கா (0) மற்றும் டி சில்வா (4) ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி இலங்கை அணியை மொத்தமாக காலி செய்தார்.

பந்துவீச்சில் மேஜிக் காட்டி 6 விக்கெட்டுகளையும் அள்ளிய முகமது சிராஜ்... வியந்து பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 3

இது தவிர மொத்தம் 7 ஓவர்களை வீசி அதில் 21 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் கைப்பற்றினார். அதே போன்று ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், பும்ராஹ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியதன் மூலம் 15.2 ஓவரில் வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்துவீச்சில் மேஜிக் காட்டி 6 விக்கெட்டுகளையும் அள்ளிய முகமது சிராஜ்... வியந்து பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 4

இந்தநிலையில், இந்த போட்டியில்  தனி ஆளாக மொத்த இலங்கை அணியையும் கதறவிட்டு  6 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முகமது சிராஜிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் முகமது சிராஜை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அதில் சில;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *