ஜடேஜாவிற்கு இடம் இல்லை... மூன்றாவது டி.20 போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணி !! 1

விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.

ஜடேஜாவிற்கு இடம் இல்லை... மூன்றாவது டி.20 போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணி !! 2

வெஸ்ட் இண்டீஸின் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ரவீந்திர ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர அணியில் வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

ஜடேஜாவிற்கு இடம் இல்லை... மூன்றாவது டி.20 போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணி !! 3

மூன்றாவது போட்டிக்கான விண்டீஸ் அணியும் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ஓடியன் ஸ்மித் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டோமினிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திர அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங்.

விண்டீஸ் அணியின் ஆடும் லெவன்;

பிராண்டன் கிங், கெய்ல் மெயர்ஸ், நிக்கோலஸ் பூரண், சிம்ரன் ஹெட்மயர், டீவன் தாமஸ், ரோவ்மன் பவல், டோமினிக், ஜேசன் ஹோல்டர், அகெல் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், ஓபட் மெக்காய்.

Leave a comment

Your email address will not be published.