தினேஷ் கார்த்திக் ஒன்னும் பெரிய பினிசர் கிடையாது... அதிரடியாக பேசிய முன்னாள் இந்திய வீரர் !! 1

தினேஷ் கார்த்திக்கை பினிஷர் என்று கூறாதீர்கள் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சர்வதேச இந்திய அணிக்கு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் ஒன்னும் பெரிய பினிசர் கிடையாது... அதிரடியாக பேசிய முன்னாள் இந்திய வீரர் !! 2

தோனி இந்திய அணியின் ரெகுலர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இருந்ததால் தினேஷ் கார்த்திக்கால் ரெகுலராக இந்திய அணியில் விளையாட முடியவில்லை. எப்பொழுதெல்லாம் தோனி ஓய்வெடுத்துக் கொள்கிறாரோ அப்பொழுதெல்லாம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக வளம் வந்த தினேஷ் கார்த்திக், தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி வந்தார்.

தினேஷ் கார்த்திக் ஒன்னும் பெரிய பினிசர் கிடையாது... அதிரடியாக பேசிய முன்னாள் இந்திய வீரர் !! 3

தோனியின் ஓய்விற்குப்பின் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் முக்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இவரால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாட முடியவில்லை.

மேலும் வயதான தினேஷ் கார்த்திக்க்கை தேர்ந்தெடுப்பதற்கு பதில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேர்ந்தெடுத்தால் எதிர்கால இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்பதால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.தினேஷ் கார்த்திக் ஒன்னும் பெரிய பினிசர் கிடையாது... அதிரடியாக பேசிய முன்னாள் இந்திய வீரர் !! 4

ஆனால் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடர் இந்திய அணியின் தேர்வாளர்கள் உட்பட அனைவரது எண்ணத்தையும் மாற்றி விட்டது என்றே கூறலாம், ஏனென்றால் இந்த தொடரில் தினேஷ் கார்த்திக் மிக அதிரடியாக செயல்பட்டு ஒற்றையாளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

விளையாடுவதற்கு வயது ஒன்றும் தடை கிடையாது என்பதை நிரூபிக்கும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இப்படிப்பட்ட வீரரை இதற்கு மேல் புறம் தள்ள முடியாது என்ற நிலையில் இந்திய அணி தேர்வாளர்கள் தினேஷ் கார்த்திகை மீண்டும் இந்திய அணியில் இணைத்துக் கொண்டனர்.தினேஷ் கார்த்திக் ஒன்னும் பெரிய பினிசர் கிடையாது... அதிரடியாக பேசிய முன்னாள் இந்திய வீரர் !! 5

அன்றிலிருந்து இன்றுவரை தினேஷ் கார்த்திக் தன்னுடைய கடமையை சிறப்பாக செய்து வருகிறார்.பல போட்டிகளில் போராடி நல்ல பினிஷிங்கை இந்திய அணிக்கு கொடுக்கிறார்.

இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ள சிறந்த ஃபினிஷராக தினேஷ் கார்த்திக்கை பாராட்டுகின்றனர்.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக்கை பினிஷர் என்று கூறுவது தவறு என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்.தினேஷ் கார்த்திக் ஒன்னும் பெரிய பினிசர் கிடையாது... அதிரடியாக பேசிய முன்னாள் இந்திய வீரர் !! 6

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், “தினேஷ் கார்த்திகை பினிஷர் என்று கூறுவது தவறு, உண்மையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுகிறார். அவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மற்றும் தற்போது சில போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அது ஃபினிஷர் கிடையாது , எட்டு அல்லது ஒன்பது ஓவர்களில் களமிறங்கி கடைசி வரை நின்று போராடும் ஒருவரை தான் நாம் பினிஷர் என்று கூற வேண்டும். தினேஷ் கார்த்திக் கடைசி சமயத்தில் வந்து பைனல் டச் (Final touch) கொடுக்கிறார். உதாரணமாக சூரியகுமார் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றையாளாக இருந்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். அதுதான் உண்மையான பினிஷிங் ரோல், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் மற்றும் நம்முடைய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியவர்கள் சிறந்த பினிஷர்கள், உண்மையான பினிஷர்கள் எட்டு அல்லது ஒன்பது ஓவர்களில் இருந்தே செயல்படுவார்கள். ஆனால் தினேஷ் கார்த்திக் 16 ஓவரில் தான் இந்திய அணிக்காக விளையாட வருகிறார் அது உண்மையான பினிஷிங் கிடையாது என்று ஶ்ரீகாந்த் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.