முதல் இந்திய வீரர் என்ற பெருமை... டி.20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா !! 1

விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியின் மூலம் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா டி.20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் இந்திய வீரர் என்ற பெருமை... டி.20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. விண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கெய்ல் மெயர்ஸ் 73 ரன்களும், ரோவ்மன் பவல் 23 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் 76 ரன்களும், ரிஷப் பண்ட் 33* ரன்களும் ஸ்ரேயஸ் ஐயர் 24 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

முதல் இந்திய வீரர் என்ற பெருமை... டி.20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா !! 3

இந்தநிலையில், இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஹர்திக் பாண்டியா, டி.20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

மூன்றாவது டி.20 போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி.20 போட்டிகளில் தனது 50வது விக்கெட்டை பதிவு செய்த ஹர்திக் பாண்டியா இதன் மூலம் டி.20 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் அஸ்வின், சாஹல், பும்ராஹ் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்கள் டி.20 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.

முதல் இந்திய வீரர் என்ற பெருமை... டி.20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா !! 4

டி.20 போட்டிகளில் இதுவரை மொத்தம் 806 ரன்கள் எடுத்துள்ள ஹர்திக் பாண்டியா, தற்போது பந்துவீச்சில் 50 விக்கெட்டுகளும் கைப்பற்றியதன் மூலம், டி.20 போட்டிகளில் 500 ரன்களுக்குள் மேல் எடுத்ததோடு 50 விக்கெட்டுகளும் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய வீரர்கள் 500+ ரன்களுடன் 50 விக்கெட்டுகளும் கைப்பற்றியது இல்லை.

Leave a comment

Your email address will not be published.