கடைசி இரண்டு போட்டியிலும் ரோஹித் சர்மா வேண்டாம்... அது தான் உங்களுக்கு நல்லது; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

விண்டீஸ் அணியுடனான கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, விண்டீஸ் அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

கடைசி இரண்டு போட்டியிலும் ரோஹித் சர்மா வேண்டாம்... அது தான் உங்களுக்கு நல்லது; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் விண்டீஸ் அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி 2ம் தேதி நடைபெற்றது.

இந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா போட்டியின் போது காயமடைந்து பாதியில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக ரோஹித் சர்மா பாதியில் வெளியேறும் நிலை ஏற்பட்டதாக பிசிசிஐ., அறிவித்திருந்தது. போட்டி முடிந்தபிறகு பேசிய ரோஹித் சர்மாவும், வலி குறைந்துவிட்டதாகவும் அடுத்த போட்டிக்கு முன் முழுமையாக காயம் சரியாகிவிடும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

கடைசி இரண்டு போட்டியிலும் ரோஹித் சர்மா வேண்டாம்... அது தான் உங்களுக்கு நல்லது; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

காயத்தில் இருந்து ரோஹித் சர்மா முழுமையாக குணமடைந்தாலும், ஆசிய கோப்பை தொடரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ரோஹித் சர்மா விண்டீஸ் அணியுடனான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. ரோஹித் சர்மா எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாடுவாரா இல்லையா என்பது உறுதியாக தெரியவராததால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் ரோஹித் சர்மா குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா, ரோஹித் சர்மாவிற்கு கடைசி இரண்டு போட்டியில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடைசி இரண்டு போட்டியிலும் ரோஹித் சர்மா வேண்டாம்... அது தான் உங்களுக்கு நல்லது; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 4

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “மூன்றாவது டி.20 போட்டியின் போது ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயத்தின் வீரியம், வலியின் போது அவரிடம் இருந்து வெளிப்பட்ட முகபாவனையில் இருந்தே நன்றாக தெரிந்தது. ரோஹித் சர்மா தனது உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். விண்டீஸ் அணியுடனான கடைசி இரண்டு டி.20 போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவதை விட அவரது உடற்தகுதியே இந்திய அணிக்கும் அவருக்கும் முக்கியம். கடைசி இரண்டு போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாவிட்டால் அதனால் இந்திய அணிக்கும் பெரிதாக பிரச்சனை எதுவும் ஏற்பட்டு விடாது. ஆனால் டி.20 உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவின் தேவை மிகவும் அவசியம். எனவே ஆசிய கோப்பை மற்றும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவிற்கு விண்டீஸ் அணியுடனான கடைசி இரண்டு டி.20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு கொடுப்பதே சரியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.