சம்மந்தமே இல்லாம அஸ்வினுக்கு ஏண்டா டீம்ல இடம் கொடுக்குறீங்க...? இந்திய அணி மீது முன்னாள் வீரர் காட்டம் !! 1

அஸ்வினை இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது என்று ஶ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி மிக சிறந்த முறையில் விளையாடிய ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.சம்மந்தமே இல்லாம அஸ்வினுக்கு ஏண்டா டீம்ல இடம் கொடுக்குறீங்க...? இந்திய அணி மீது முன்னாள் வீரர் காட்டம் !! 2

இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் என்று கூறலாம், பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர்.ஆனால் பந்துவீச்சில் அனைவரும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர்.

குறிப்பாக எட்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ரி என்ட்ரி கொடுத்த ரவி அஸ்வின் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். சம்மந்தமே இல்லாம அஸ்வினுக்கு ஏண்டா டீம்ல இடம் கொடுக்குறீங்க...? இந்திய அணி மீது முன்னாள் வீரர் காட்டம் !! 3

பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் தன்னால் சிறப்பாக செயல்படும் என்பதை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரவி அஸ்வின் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இருந்த போதும் திடீரென டி20 தொடரில் காட்சி தரும் அஸ்வின், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது இன்று வரை குழப்பமாகவே உள்ளது.சம்மந்தமே இல்லாம அஸ்வினுக்கு ஏண்டா டீம்ல இடம் கொடுக்குறீங்க...? இந்திய அணி மீது முன்னாள் வீரர் காட்டம் !! 4

இதனால் ரசிகர்கள் உட்பட பதில் தெரியாதவர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் அஸ்வின் குறித்து தங்களது கருத்துக்களை கேள்வியாக கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் முன்னாள் இந்திய அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திடம் ரசிகர்கள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறுவாரா என்பது குறித்து கேட்டுள்ளனர்.சம்மந்தமே இல்லாம அஸ்வினுக்கு ஏண்டா டீம்ல இடம் கொடுக்குறீங்க...? இந்திய அணி மீது முன்னாள் வீரர் காட்டம் !! 5

அதற்கு பதில் அளித்த ஸ்ரீகாந்த், “இது முக்கியமான ஒரு கேள்வியாகும், ஆனால் இதற்கு அஸ்வின் என்ன பதில் சொல்வார் என்றே தெரியவில்லை, ஏன் அவரை அணியிலிருந்து நீக்குகிறார்கள்.?, ஏன் அவரை அணியில் சேர்கிறார்கள்.?, ஏன் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை.?ஏன் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுகிறார்.? என்பது யாருக்குமே புரியாத புதிராக உள்ளது.ஆனால் இந்திய அணியை பொறுத்தவரையில் ஜடேஜா முதன்மை சுழற்பந்து வீச்சாளர், அதற்கு பின் சஹால், அக்சர் பட்டெல்,அஸ்வின் அல்லது பேக் அப் ஸ்பின்னர்கள் இரண்டாவதாக உள்ளனர்,இதில் இரண்டு வீரர்கள் நிச்சயம் கழட்டி விடப்படுவார்கள், அஸ்வினுக்கு ஆல்ரவுண்டர் திறமை இருக்கலாம்,ஆனால் ரிஸ்ட் ஸ்பின்னராக சஹால் தான் என்னுடைய முதன்மை தேர்வு என்று ஶ்ரீகாந்த் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.