ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவாரா..? முக்கிய தகவல் வெளியாகியுள்ளது !! 1

விண்டீஸ் அணியுடனான மூன்றாவது டி.20 போட்டியின் போது காயமடைந்த ரோஹித் சர்மா எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, விண்டீஸ் அணியுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவாரா..? முக்கிய தகவல் வெளியாகியுள்ளது !! 2

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் விண்டீஸ் அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி 2ம் தேதி நடைபெற்றது.

இந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா போட்டியின் போது காயமடைந்து பாதியில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவாரா..? முக்கிய தகவல் வெளியாகியுள்ளது !! 3

முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக ரோஹித் சர்மா பாதியில் வெளியேறும் நிலை ஏற்பட்டதாக பிசிசிஐ., அறிவித்திருந்தது. போட்டி முடிந்தபிறகு பேசிய ரோஹித் சர்மாவும், வலி குறைந்துவிட்டதாகவும் அடுத்த போட்டிக்கு முன் முழுமையாக காயம் சரியாகிவிடும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவாரா..? முக்கிய தகவல் வெளியாகியுள்ளது !! 4

இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி, ரோஹித் சர்மா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கான ஆடும் லெவன் தேர்வில் ரோஹித் சர்மாவும் இடம்பெறுவார் எனவும் தெரியவந்துள்ளது. ரோஹித் சர்மா காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டதால் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் அவர் விளையாட வேண்டுமா இல்லை ஓய்வு கொடுக்கலாமா என்பது இனி தேர்வாளர்களின் கையில் தான் உள்ளது.

அடுத்ததாக ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என முக்கியமான தொடர்கள் வரிசையாக இருப்பதால் ரோஹித் சர்மா முழு ஃபிட்னெஸுடன் இருப்பது இந்திய அணிக்கு முக்கியம். ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை என்பதால் அவரது ஃபிட்னெஸ் மிக முக்கியம்.

Leave a comment

Your email address will not be published.