எல்லா பக்கமும் அடிக்கிறாரு... சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் இருக்கும் குறையை கண்டுபிடிக்கவே முடியாது; முன்னாள் வீரர் பாராட்டு !! 1

சூரியகுமார் யாதவ் தன்னுடைய பேட்டிங்கில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என்று சஞ்சய் மஞ்சரெக்கர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 தொடரில் ஒற்றை ஆளாக தனித்து நின்று 44 பந்துகளில் 76 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த சூரியகுமார் யாதவ், சமகால இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார்.

எல்லா பக்கமும் அடிக்கிறாரு... சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் இருக்கும் குறையை கண்டுபிடிக்கவே முடியாது; முன்னாள் வீரர் பாராட்டு !! 2

தன்னுடைய 10 வயதில் கிரிக்கெட் கரியரை ஆரம்பித்து சூரியகுமார் யாதவ் 2010 ஆம் ஆண்டு மும்பை அணிக்காக தன்னுடைய முதல் தர போட்டியில் விளையாட ஆரம்பித்தார்.

என்னதான் இவர் சிறப்பாக விளையாடினாலும் இவருக்கான அங்கீகாரம் அப்பொழுது கொடுக்கப்படவில்லை, தற்போது 32 வயதை நெருங்கப் போகும் சூரிய குமார் யாதவ் நடந்து முடிந்த 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக திகழ்ந்தார்.

எல்லா பக்கமும் அடிக்கிறாரு... சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் இருக்கும் குறையை கண்டுபிடிக்கவே முடியாது; முன்னாள் வீரர் பாராட்டு !! 3

இருந்த போதும் இவருக்கு 2021 இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற உள்ளூர் போட்டியில் விளையாடுவதற்கு தான் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் அடுத்தடுத்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி தற்போது டி20 தொடருக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

காலதாமதமாக வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அதையும் சரியாக பயன்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்று வரும் சூரியகுமார் யாதவ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

எல்லா பக்கமும் அடிக்கிறாரு... சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் இருக்கும் குறையை கண்டுபிடிக்கவே முடியாது; முன்னாள் வீரர் பாராட்டு !! 4

இவருடைய அபாரமான வளர்ச்சியை இந்திய கிரிக்கெட் வட்டாரம் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரமே வெகுவாக பாராட்டி வருகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சரேக்கர், சூரியகுமார் யாதவ் தன்னுடைய கிரிக்கெட்டை மேம்படுத்தியுள்ளார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

எல்லா பக்கமும் அடிக்கிறாரு... சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் இருக்கும் குறையை கண்டுபிடிக்கவே முடியாது; முன்னாள் வீரர் பாராட்டு !! 5

இதுகுறித்து சஞ்சய் பேசுகையில், “கடந்த ஐந்து வருடங்களில் சூரியகுமார் யாதவியின் வளர்ச்சி இன்றி அமையாத ஒன்றாக உள்ளது, சில வருடங்களுக்கு முன்பு ஸ்கொயர் லெக் பகுதியில் பேக் ப்லிக் அடிப்பது இவருடைய தனித்துவமான ஒன்றாக இருந்தது ஆனால் தற்பொழுது அது போன்ற ஷாட்கள் அதிகரித்துள்ளது, நல்ல வேகம் லைன் மற்றும் லென்த் என எதுவும் சூரியகுமார் யாதவை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சஞ்சய் மஞ்சரெக்கர் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.