பந்துவீச்சில் மாஸ் காட்டிய இந்திய வீரர்கள்; 189 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே அணி !! 1

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

பந்துவீச்சில் மாஸ் காட்டிய இந்திய வீரர்கள்; 189 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே அணி !! 2

இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான கையா 4 ரன்னிலும், மருமானி 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

பந்துவீச்சில் மாஸ் காட்டிய இந்திய வீரர்கள்; 189 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே அணி !! 3

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் சகப்வா (34) மற்றும் பிராட் எவன்ஸ் (33*) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 40.3 ஓவரில் வெறும் 189 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பந்துவீச்சில் மாஸ் காட்டிய இந்திய வீரர்கள்; 189 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே அணி !! 4

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், அக்‌ஷர் பட்டேல் மற்றும் பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published.