ரொம்ப கஷ்டம்... ஷிகர் தவானின் நிலைமை யாருக்கும் வர கூடாது; முகமது கைஃப் சொல்கிறார் !! 1

தற்போதைய இந்திய அணியில் அதிகமான இளம் துவக்க வீரர்கள் இருப்பதால், ஷிகர் தவான் ஒவ்வொரு போட்டியிலும் கடும் நெருக்கடியுடனே விளையாடி வருவதாக முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறியதால், 189 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி ஆல் அவுட்டானது.

ரொம்ப கஷ்டம்... ஷிகர் தவானின் நிலைமை யாருக்கும் வர கூடாது; முகமது கைஃப் சொல்கிறார் !! 2

இதன்பின் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 81* ரன்களும், சுப்மன் கில் 82* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், ஒரே விக்கெட்டை கூட இலக்காமல் இலகுவாக இலக்கை எட்டிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ஷிகர் தவான், சுப்மன் கில் போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில் சிலர் ஷிகர் தவான் டெஸ்ட் போட்டிகளை போன்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை விமர்சித்தும் பேசி வருகின்றனர்.

ரொம்ப கஷ்டம்... ஷிகர் தவானின் நிலைமை யாருக்கும் வர கூடாது; முகமது கைஃப் சொல்கிறார் !! 3

அந்தவகையில், ஷிகர் தவான் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப், தற்போதைய இந்திய அணியில் அதிகமான துவக்க வீரர்கள் இருப்பதால் ஒவ்வொரு போட்டியையும் ஷிகர் தவான் கடும் நெருக்கடியுடன் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகமது கைஃப் பேசுகையில், “ஷிகர் தவான் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அவருக்கு டி.20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது இல்லை. தற்போதைய இந்திய அணியில் அதிகமான துவக்க வீரர்கள் இருப்பதால், ஷிகர் தவான் ஓரிரு போட்டிகளில் சொதப்பினால் கூட அவர் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் தனது இடத்தை இழக்க நேரிடும். எனவே ஷிகர் தவான் ஒவ்வொரு போட்டியையும் கடும் நெருக்கடியுடன் எதிர்கொண்டு வருகிறார் என நான் கருதுகிறேன், ஒவ்வொரு போட்டியும் அவருக்கு ஒரு போரை போன்று இருக்கும். ஷிகர் தவான் இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வருகிறார். 6500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் ஷிகர் தவானை குறை சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.