அவ்வளவு ஈசியா விட்ற மாட்டோம்... வெற்றி எங்களுக்கு தான்; இந்திய அணியை எச்சரித்த ஜிம்பாப்வே இளம் வீரர் !! 1

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை ஜிம்பாப்வே அணியே வெல்லும் என ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரரான இன்னோசண்ட் கையா தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஆகஸ்ட் 18,20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

அவ்வளவு ஈசியா விட்ற மாட்டோம்... வெற்றி எங்களுக்கு தான்; இந்திய அணியை எச்சரித்த ஜிம்பாப்வே இளம் வீரர் !! 2

இந்த மாத இறுதியில் துவங்கும் ஆசிய கோப்பை தொடரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற சீனியர் வீரர்களுக்கு ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இரு அணிகள் இடையேயான முதல் போட்டி 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியுடனான இந்த தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரரான இன்னோசண்ட் கையா, ஒருநாள் தொடரை ஜிம்பாப்வே அணியே வெல்லும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவ்வளவு ஈசியா விட்ற மாட்டோம்... வெற்றி எங்களுக்கு தான்; இந்திய அணியை எச்சரித்த ஜிம்பாப்வே இளம் வீரர் !! 3

இது குறித்து இன்னோசண்ட் கையா பேசுகையில், “இந்திய அணியுடனான இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியே வெல்லும் என முழுமையாக நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் இந்த தொடரில் நான் சதம் அடிக்க வேண்டும் என விரும்புகிறேன். சதம் அடிப்பதோடு இந்த தொடரில் அதிகமான ரன்களும் குவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம், அதுவே என்னுடைய தற்போதைய இலக்கு” என்று தெரிவித்தார்.

அவ்வளவு ஈசியா விட்ற மாட்டோம்... வெற்றி எங்களுக்கு தான்; இந்திய அணியை எச்சரித்த ஜிம்பாப்வே இளம் வீரர் !! 4

மேலும் பேசிய கையா, “விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் போன்ற இந்திய அணியின் மிக சிறந்த வீரர்கள் எங்களுக்கு எதிராக விளையாடாதது எங்களுக்கு சாதகமான விசயம். சீனியர் வீரர்கள் பலர் இல்லாவிட்டாலும், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியும் வலுவானது என்பது எங்களுக்கு நன்கு தெரியும். இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் இருப்பதால், அவர்களை குறைத்து மதிப்பிட்டு விட மாட்டோம். நாங்களும் இந்த தொடரில் எங்களால் முடிந்தவரை வெற்றிக்காக மிக கடுமையாக போராடுவோம். மற்ற சீனியர் வீரர்களை விட இந்த தொடரில் பும்ராஹ் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரும் சாதகமான விசயம். பும்ராஹ் உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர், எங்களுக்கு எதிராக அவர் விளையாடாதது எங்களது வெற்றி வாய்ப்பை இலகுவாக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *